பிரித்தானியாவின் 5 முக்கிய நகரங்களில் வைக்கப்பட்ட வெடிகுண்டுகள்: பகீர் கிளம்பியிருக்கும் ராணுவம்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவின் முக்கிய நகரங்களில் கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்ட 4 வெடிகுண்டுகளை கொண்ட பொதிகளுக்கு ஐரிஷ் குடியரசு இராணுவம் பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது.

பிரித்தானியாவில் கடந்த 5ம் திகதியன்று ஹீத்ரோ விமான நிலையம், லண்டன் சிட்டி விமான நிலையம் மற்றும் வாட்டர்லூ ரயில் நிலையம் ஆகிய இடங்களில் 2 மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து 3 வெடிகுண்டுகளை கொண்ட பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த சம்பவமானது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஆயுதம் ஏந்திய பொலிஸார் அதிகளவில் குவிக்கப்பட்டு தீவிரமான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

அதற்கு அடுத்த நாள் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் அதேபோன்ற வெடிகுண்டு பொதி ஒன்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பொதிகள் அனைத்தும் அயர்லாந்து அரசால் உபயோகப்படுத்தப்படும் இதய வடிவிலான தபால் முத்திரை கொண்டிருந்தது. இதனை அறிந்த அயர்லாந்து பொலிஸ் அதிகாரிகள் பிரித்தானிய பொலிஸாருக்கு உதவ முன்வந்தனர்.

இந்த நிலையில் பெல்ஃபாஸ்ட்டை அடிப்படையாகக் கொண்ட செய்தித்தாளான ஐரிஷ் நியூஸ் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. IRA எனப்படும் ஐரிஷ் குடியரசு இராணுவம் இந்த பொதிகளுக்கு பொறுப்பேற்றுள்ளது.

மொத்தமாக 5 வெடிகுண்டுகளை கொண்ட பொதிகளை பிரித்தானியாவிற்கு அனுப்பியதாகவும், அதில் மூன்று 'வணிக இலக்குகளை' குறிவைத்தும், மீதமுள்ள இரண்டு பிரிட்டிஷ் இராணுவ ஆட்சேர்ப்பு அதிகாரிகளுக்கு அனுப்பபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கண்டுபிடிக்கப்பட்ட மூன்று பொதிகள் முக்கிய வணிக வளாகங்கள் அருகிலும், நான்காவது பொதி கண்டுபிடிக்கபட்ட கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் ஒரு பிரித்தானிய இராணுவ ஆட்சேர்ப்பு அதிகாரி வேலை செய்ததாகவும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் நான்காவது பொதி இருக்கும் இடம் குறித்து அதிகாரிகள் தீவிரமான தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். சதேகத்திற்குரிய பொதிகள் குறித்து ஏற்கனவே வணிக வியாபாரிகளுக்கு விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers