£200,000 மதிப்புள்ள திருமண மோதிரத்தை கழட்டிய கர்ப்பிணி மேகன் மெர்க்கல்: இது தான் காரணமா?

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசி மேகன் மெர்க்கல் தனது விரலில் திருமண நிச்சயதார்த்த மோதிரம் இல்லாமல் சமீபத்தில் வெளியில் வந்த நிலையில் அதற்கான காரணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானிய இளவரசி மெர்க்கல் இடது கை மோதிர விரலில் எப்போதும் ஒரு வைர மோதிரம் ஜொலிக்கும்.

அது அவரின் திருமண நிச்சயதார்த்த மோதிரமாகும். அதன் மதிப்பு £200,000 இருக்கும் என கூறப்படுகிறது.

மெர்க்கல் எப்போதும் அந்த மோதிரத்தை விரலில் அணிந்தபடி தான் வெளியிடங்களுக்கு வருவார். ஆனால் நேற்று மெர்க்கல் கலந்து கொண்ட நிகழ்ச்சியின் போது அவர் விரலில் அந்த மோதிரம் இல்லை.

மெர்க்கல் விரலில் உள்ள மோதிரத்தை ஏன் கழட்டினார் என பலரும் விவாதம் செய்து வருகிறார்கள்.

அதாவது மோதிரத்தை சுத்தப்படுத்த அல்லது பழுதை சரிசெய்ய அவர் கழட்டியிருக்கலாம் என சிலர் கூறுகிறார்கள்.

மேலும், மெர்க்கல் 7 மாதம் கர்ப்பமாக உள்ளார். இதனால் அவர் கால்கள், கணுக்கால், விரல்கள் போன்றவை இதுபோன்ற சமயத்தில் வீங்க வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக கூட மெர்க்கல் மோதிரத்தை கழட்டி வைத்திருக்கலாம் என சில கூறுகிறார்கள்.

இது குறித்து பிரபல எழுத்தாளர் மிலி ஹில் கூறுகையில், கர்ப்பமாக இருப்பவர்களுக்கு விரலில் வீக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.

மெர்க்கலும் இந்த பிரச்சனை ஏற்பட்டிருக்கலாம். ஆனால் இதுகுறித்து கவலைப்பட தேவையில்லை என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers