இலங்கையில் வாங்கிய நகைகள்! லட்சக்கணக்கான பணத்துடன் சொகுசு வாழ்க்கை.... இளம்பெண்ணின் அதிரவைக்கும் பின்னணி

Report Print Raju Raju in பிரித்தானியா

வேல்ஸை சேர்ந்த இளம் பெண் பொலிஸ், மனைவியை இழந்த முதியவரை மயக்கி லட்சக்கணக்கில் பணம், நகைகள் மற்றும் சொகுசு காரை பெற்று கொண்ட நிலையில் காவலர் பணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

பாட்டூ மெண்டி (28) என்ற இளம்பெண் கடந்த 2014-ல் ஜே.பி (87) என்ற முதியவரின் மனைவிக்கு தேவையான உதவிகளை செய்து வரும் கவனிப்பாளராக இருந்து வந்தார்.

பின்னர் ஜே.பி-யின் மனைவி 2015-ல் உயிரிழந்துவிட்டார்.

இதன் பின்னர் முதியவர் ஜே.பி-யை மயக்கிய மெண்டி அவரிடம் இருந்து £34,670 பணம், BMW சொகுசு கார், £320 மதிப்புள்ள கைகடிகாரம், இலங்கையில் இருந்து வாங்கப்பட்ட நெக்லஸ், வாஷிங் மெஷின், குக்கர் போன்ற பொருட்களை பெற்றுள்ளார்.

இதோடு இன்னும் சொகுசாக வாழ தேவையான விடயங்களை வாங்கியுள்ளார்.

இந்நிலையில் கடந்தாண்டு மார்ச் மாதம் பொலிசில் கான்ஸ்டபிள் பணி மெண்டிக்கு கிடைத்தது.

இதையடுத்து கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் முதியவர் ஜே.பியுடன் மெண்டிக்கு இருந்த தொடர்பு குறித்து வெளியுலகுக்கு தெரியவந்தது.

காவலர் பணியில் இருந்து கொண்டு இப்படி முறை தவறிய உறவால் பணம் மற்றும் நகைகளை முதியவரை மயக்கி பெற்றுகொண்டதாக மெண்டி மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

அதாவது நேர்மையாக இருக்க வேண்டியவர் இப்படி மோசமாக நடந்து கொண்டது தவறு என கூறப்பட்டது.

இதையடுத்து மெண்டி தனது காவலர் பணியை ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்ட நிலையில் அதை செய்துள்ளார்.

இதோடு பொலிஸ் பணியில் எப்போதும் அவர் சேரமுடியாதபடி தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers