பிரெக்ஸிட் தொடர்பான வாக்கெடுப்பு இன்று! நடக்கப் போவது என்ன?

Report Print Fathima Fathima in பிரித்தானியா

பிரெக்ஸிட் தொடர்பான இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ள நிலையில், எம்பிக்களின் ஆதரவை பெற பிரதமர் தெரேசா மே முயன்று வருகிறார்.

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரித்தானியா விலகுவதற்கான ஒப்பந்தம் தொடர்பில் இன்று(மார்ச் 12) வாக்கெடுப்பு நடைபெறும் என இரு வாரங்களுக்கு முன்னர் தெரேசா மே அறிவித்திருந்தார்.

இதை ஏற்காத பிரெக்ஸிட் ஆதரவாளர்கள் வாக்கெடுப்பை தள்ளிப்போடும்படியும், ஒருவேளை இது நடந்தால் ஒப்பந்தம் படுதோல்வியை சந்திக்கும் எனவும் எச்சரித்திருந்தனர்.

கடந்த ஜனவரி மாதம் நடந்த வாக்கெடுப்பில் பெரும்பாலான எம்பிக்கள் நிராகரித்த நிலையில், தற்போதைய வாக்கெடுப்பின் போது ஒப்பந்தத்தை நிறைவேற்ற தெரேசா மே இறுதிக்கட்ட முயற்சியில் இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் பிரெக்ஸிட் ஒப்பந்தத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு தீர்வு காண்பது தெரேசா மே மற்றும் எம்பிக்களின் கையில் இருப்பதாக ஐரோப்பிய யூனியனின் தலைவர் மைக்கேல் பார்னியர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்