157பேரை பலி வாங்கிய விமான விபத்து குறித்த புதிய தகவல்கள்! சிக்கிய கருப்பு பெட்டியும், நேரில் பார்த்தவர் சாட்சியமும்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

157பேரை பலி வாங்கிய எத்தியோப்பிய விமானத்தின் கருப்பு பெட்டி சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த போயிங் ரக விமானம் புறப்பட்ட சில நிமிடங்களுக்குள் விழுந்து நொறுங்கியதன் காரணம் தெரியாத நிலையில், அதன் கருப்புப் பெட்டி கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக எத்தியோப்பிய தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதையடுத்து, விமான விபத்து குறித்த முக்கிய தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது.

என்றாலும், விமான நிறுவன ஊழியர் ஒருவர், அந்த கருப்புப் பெட்டி சிறிது சேதமடைந்துள்ளதாகவும், இருந்தாலும் தங்களால் அதிலிருந்து என்ன தகவல்களை பெறமுடியும் என முயற்சி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், விமான விபத்தை நேரில் பார்த்ததாக Gebeyehu Fikadu என்பவர் தெரிவித்துள்ளார்.

அவர் விமானத்தின் வால் பகுதியிலிருந்து கரும்புகை எழுந்ததைக் கண்டதாகவும், விமானம் தரையில் விழுந்து உருண்டு எழுந்ததையும், அது பூமியை நோக்கி விழும்போது பயணிகளின் லக்கேஜ்களும் உடைகளும் எரிந்தவாறே கீழ் நோக்கி விழுந்ததையும் கண்டதாக தெரிவித்துள்ளார்.


மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers