ஷமீமா பேகத்தின் குழந்தை இறந்ததை அரசியலாக்காதீர்கள்: அது அவனது பெற்றோரின் தவறான முடிவால் நிகழ்ந்த சோகம்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவிலிருந்து ஓடிப்போய் சிரிய தீவிரவாதி ஒருவரை மணந்து கொண்ட மாணவியான ஷமீமா பேகத்தின் குழந்தை இறந்ததை அரசியலாக்க வேண்டாம் என பிரபல பிரித்தானிய பத்திரிகையாளர் ஒருவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஷமீமா பேகத்திற்கு தனது முதல் இரண்டு குழந்தைகளைப் போலவே மூன்றாவது குழந்தையும் இறந்து விடலாம் என்ற அச்சம் ஏற்கனவே இருந்திருக்கிறது.

அவர் தங்கியிருந்த அகதிகள் முகாம் குழந்தைகளை வளர்ப்பதற்கு உகந்த இடம் அல்ல என்று அவர் முன்னரே கூறியிருக்கிறார்.

அவரது முந்தைய குழந்தைகள் இருவரும் பசி பட்டினியாலும், இனம் தெரியாத நோயாலும் இறந்திருக்கிறார்கள்.

அப்படியிருக்கும்போது அவரது மூன்றாவது மகன் இருந்த சூழல் அந்த அளவிற்கு மோசமானது அல்ல.

அப்படியிருந்தும் அந்த குழந்தை இறந்த விடயத்தோடு ஷமீமாவின் பிரித்தானியக் குடியுரிமையை உள்துறைச் செயலர் பறித்த விடயத்தை முடிச்சுப்போட்டு பெரும் பரபரப்பு ஏற்படுத்தப்பட்டது.

ஷமீமாவின் குடியுரிமை பறிக்கப்பட்டதுதான் குழந்தை இறந்ததற்கு காரணம் என்பது போலவே, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களே ஜாவித்தை குறை கூறினார்கள். இதில் முக்கிய விடயம் ஷமீமா ஒரு பெண் என்பது.

இதே ஒரு ஆணாக இருந்திருந்தால், மனிதர்களை வரிசையாக நிறுத்தி, அவர்களது தலைகளை வெட்டி, தாங்கள் தங்கள் பாலியல் இச்சைகளை தீர்த்துக் கொள்வதற்காக ஒரு கூட்டம் பெண்களை பாலியல் அடிமைகளாக்கி, சிக்கிக் கொள்வோம் என்று தெரிந்ததும், அவர்களையும் ஈவிரக்கமின்றி தலைகளை அறுத்து குப்பைத் தொட்டியில் போட்ட ஒரு ஆணாக இருந்திருந்தால், இப்படி ஒரு பேச்சே வந்திருக்காது.

அதே கூட்டத்தைச் சேர்ந்தவராக இருந்தும் ஷமீமா ஒரு பெண் என்பதால், அவருக்கு ஒரு குழந்தை பிறந்தது என்பதால், அந்த குழந்தை இறந்துபோனது என்பதால்தான் இவ்வளவு பேச்சும்.

சரியானதை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இருந்தும் அந்த குழந்தையின் பெற்றோர் தவறானதை தெரிந்து கொண்டார்கள்.

தீவிரவாதக் குழுவில் சேர வேண்டும் என முடிவெடுத்தது அந்த குழந்தையின் பெற்றோர்தான், அப்படியிருக்க அந்த குழந்தை இறந்ததற்கு உள்துறைச் செயலரின் முடிவு எப்படி காரணமாக முடியும் என்று கேள்வி எழுப்புகிறார் அந்த பத்திரிகையாளர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers