பல கோடிகளுக்கு அதிபதி! சாலையில் வசிக்கவும் தயார் என அறிவிப்பு... பின்னணி காரணம் என்ன?

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் வங்கியால் தான் ஏமாற்றப்பட்டதாக கூறி வங்கியை எதிர்த்து கோடீஸ்வரர் ஒருவர் உண்ணாவிரத போராட்டம் நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Lanarkshire கவுண்டியை சேர்ந்தவர் ஜான் குயிடி (63). கோடீஸ்வர தொழிலபதிரான இவர் பிரபல வங்கியை எதிர்த்து உண்ணாவிரத போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து ஜான் கூறுகையில், வங்கியின் தலைமையகம் அமைந்துள்ள Glasgowவில் கூடாரம் அமைத்து உண்ணாவிரத போராட்டம் நடத்தவுள்ளேன்.

என் வீட்டை பாதுகாத்து கொள்ள தெருவில் வசிக்கவும் தயாராக உள்ளேன்.

கடந்த 6 வருடங்களாக அந்த வங்கி என்னை துன்புறுத்துவதோடு, மிக மோசமாக நடத்துகிறது என கூறியுள்ளார்.

அதாவது, தற்போது தனது முக்கிய சொத்துக்கள் பல திவாலான நிலையில் சிரமப்பட்டு வருகிறார் ஜான்.

குறித்த வங்கியின் மூலம் பணம் பெற்ற ஜான் 150 குடியிருப்பு வீடுகளை நகரின் பல பகுதிகளில் கட்ட திட்டம் வைத்திருந்தார்.

ஆனால் ஜானுக்கு, வங்கி கொடுத்த லோன் தொகைகள் அவருக்கு பொருத்தமானது கிடையாது என கருவூலக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதன்பின்னர் ஜான் வாங்கிய பணத்தை அவரால் செலுத்தமுடியாமல் போனது.

இதையடுத்து கடந்த 2015ல் ஜான் வாங்கிய கடன்கள் தொடர்பான ஆவணங்களை கையாளும் பொறுப்பு தனியார் கடன் வசூலிக்கும் ஏஜன்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து அவரின் சொத்துக்கள் ஏலத்தில் வந்தன. அவரின் £8 மில்லியன் சொத்துக்கள் விற்கப்பட்டது.

இந்த எல்லாவற்றுக்கும் அந்த வங்கியின் தவறான அணுகுமுறையே காரணம் என தற்போது வங்கியை எதிர்த்து உண்ணாவிரதம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளார் ஜான்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers