பயங்கரவாதிகள் முகாமில் சிக்கியிருக்கும் பிரித்தானிய குழந்தைகளை மீட்க நடவடிக்கை: வெளியுறவு செயலாளர்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பயங்கரவாதிகள் முகாமில் சிக்கியுள்ள பிரித்தானிய குழந்தைகளை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளியுறவு செயலாளர் கூறியுள்ளார்.

ஷமீமாவின் மூன்று வார வயது குழந்தையான ஜெரா, சிரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள அல் ஹாவல் முகாமில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது.

இந்த நிலையில் பிபிசி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள பிரித்தானியாவின் வெளியுறவு செயலாளர் ஜெர்மி ஹன்ட், இங்கிலாந்தில் இருந்து வெளியேறி பயங்கரவாத அமைப்பில் இணைவதனால் ஏற்படும் அனைத்து அபாயங்களையும், 15 வயதாகியிருந்த ஷமீமா நன்கு அறிந்திருக்கிறார்.

ஆனால் சமீபத்தில் அவருடைய 3 வார வயது குழந்தை இறந்திருப்பது பெரும் வேதனையையும் கவலையையும் அளித்தது. அங்கு உதவி செய்வதற்கு தூதரகம் கிடையாது.

அவர்களுடைய முடிவுகளை நினைத்து நான் பயப்படுகிறேன். ஆனால் அவை பரிதாபமானவை. அவர்கள் அங்கு விளைவுகளைச் சந்திக்கிறார்கள்.

எங்களுடைய துறையானது சிரியா முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பிரித்தானிய ஜிஹாதிகளின் குழந்தைகளை மீட்டு கொண்டு வருவதற்காக வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.

குழந்தைகளை பாதுகாப்பாக மீட்டு வருவது குறித்து சர்வதேச அபிவிருத்தி செயலாளர் பென்னி மோர்ட்டன் உடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்.

இந்த குழந்தைகளுடன் நாம் எவ்வாறு தொடர்பு கொள்ளலாம் என்பதைக் கவனித்து வருகிறோம். அவர்களை வெளியே கொண்டு வருவதற்கான ஒரு வழியை எப்படி கண்டுபிடிப்பது. நமக்கு தெரியும்.., துரதிருஷ்டவசமாக இந்த விடயத்தில், அது சாத்தியமில்லை என தெரிவித்துள்ளார்.

முன்னதாக பயங்கரவாத முகாமில் 5 பிரித்தானிய குழந்தைகளுடன் சிக்கியிருக்கும் சகோதரிகள் ரீமா (30) மற்றும் ஜாரா இக்பால் (28) ஆகியோரின் குடியுரிமைகள் ரத்து செய்யப்பட்ட பின்னரே, தன்னுடைய திட்டம் குறித்து வெளியுறவு செயலாளர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers