அரண்மனையில் மாற்றம் செய்ய மறுத்த ராணியின் தாயிடம் வாக்குவாதம் செய்த இளவரசர் பிலிப்

Report Print Vijay Amburore in பிரித்தானியா
264Shares

பிரித்தானிய இளவரசரின் தொழில்நுட்பம் தொடர்பான நடவடிக்கைகள் பிடிக்காமல் ராணியின் தாய் கடுமையான சண்டையில் ஈடுபட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

1950களில் அரண்மனையில் ஒரு விடயம் குறித்து பேச வேண்டும் என்றால், பணியாளரிடம் அதனை கூற வேண்டும். அவர் தான் அரண்மனையில் எந்த நபரிடம் அந்த தகவலை சேர்க்க வேண்டுமோ அவரிடம் கொண்டு செல்வார்.

ஆனால் இதனை மாற்ற வேண்டும் என இளவரசர் சார்லஸ், பணியாளர்களுக்கு பதில் தொலைபேசிகளை ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனை கேள்விப்பட்ட ராணியின் தாய், கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் என சமீபத்தில் வெளியான ஆவணப்படத்தில் தெரிவிக்கிறது. தொழில்நுப்டம் தொடர்பாக இளவரசர் செய்யும் எந்த ஒரு காரியமும் ராணியின் தாய்க்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். அந்த வரிசையில் ஒன்றாக 1953-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தொலைக்காட்சி பெட்டியையும் ராணியின் தாய் வெறுத்துள்ளார்.

பக்கிங்காம் அரண்மனையை விட்டு வெளியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர், தனது புதிய வீடான கிளாரன்ஸ் ஹவுஸ் "சிறிய மற்றும் கொடூரமாக" இருப்பதாக கூறியுள்ளார்.

ஆனாலும் ராணியின் தாய் ஒரு ஆடம்பரமான வாழ்கையினையே அங்கு வாழ்ந்துள்ளார். மகிழ்ச்சியான விதவை என அழைக்கப்பட்ட ராணியின தாய், எப்பொழுதும் வெளிப்படையாகவே இருந்துள்ளார். இரவு நேரங்களில் விருந்தாளிகளை வரவழைத்து அதிகமாக மது குடிக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ராணியின் தாய் 2002ம் ஆண்டு தன்னுடைய 102 வயதில் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்