பிரித்தானிய அரண்மனையை விட்டு வெளியேறும் மேகனின் மூன்றாவது உதவியாளர்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா
282Shares

ஏற்கனவே பிரித்தானிய இளவரசி மேகனின் இரண்டு உதவியாளர்கள் தங்கள் வேலையை ராஜினாமா செய்துவிட்டு அரண்மனையை விட்டு வெளியேறியுள்ள நிலையில், மூன்றாவதாக ஒரு உதவியாளரும் வெளியேற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதையடுத்து அரண்மனை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேகனின் வலது கை போல செயல்பட்டு வந்தவரான Amy Pickerill, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதோடு, ஹரி மேகன் தம்பதியர் இம்மாத இறுதியில் Windsorஇலுள்ள Frogmore Cottageக்கு குடிபெயர்ந்ததும், அரண்மனையிலிருந்து வெளியேற இருக்கிறார்.

மேகனுக்காக பணிபுரிவதற்கென தனிப்பட்ட முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவரும், ஏற்கனவே வெளியேறிய Samantha Cohenஇன் இடத்தைப் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டவருமான Amy வெளியேற முடிவு செய்துள்ளது, அரண்மனை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Amy மொத்தமாகவே அரண்மனையிலிருந்து வெளியேற முடிவு செய்துள்ளதோடு, வெளிநாட்டுக்கும் செல்ல முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

Amy செல்கிறார், அது அவரது சகாக்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ள செய்தியாகும் என்று கூறியுள்ள அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர், அரண்மனை ஊழியர்களுக்கிடையே அவர் மிகவும் பிரபலமானவர் என்கிறார்.

Amy, மேகனை அரண்மனை வாழ்விற்கு அறிமுகம் செய்வதில் முக்கியப் பங்கு வகித்ததோடு, அவரது தொண்டு நிறுவன பணிகளிலும் முக்கியப் பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்