ஒரு உயிரை காப்பாற்ற பலமணிநேரம் கடும் மழையில் காத்திருந்த 4,855 உயிர்கள்: பிரித்தானியாவில் நெகிழ்ச்சி சம்பவம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
165Shares

பிரித்தானியாவில் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 5 வயது சிறுவனின் உயிரை காப்பாற்ற சுமார் 5,000 பொதுமக்கள் கொட்டும் மழையில் பலமணிநேரம் வரிசையில் காத்திருந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் வோர்செஸ்டர் பகுதியில் வசித்துவரும் ஆஸ்கார் லீ என்ற 5 வயது சிறுவன், T-cell Acute Lymphoblastic Leukaemia என்ற ரத்த புற்றுநோயால் பாதிப்படைந்துள்ளான்.

சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், 3 மாதங்களுக்குள்ளாக கீமோதெரபி சிகிச்சை மூலம், ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை செய்தால் மட்டுமே காப்பாற்ற முடியும் என தெரிவித்தனர்.

இதனால், மனமுடைந்த பெற்றோர், செய்வதறியாது இருந்த வேளையில், அவர்களுக்கு உதவி செய்வதற்காக, ஆஸ்கார் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியர் முன்வந்துள்ளார்.

இதனை அடுத்து, சிறுவனுக்கு உதவி தேவைப்படுகிறது என சமூகவலைதளங்கள், இணையதளங்கள் என பல்வேறு தளங்களில் பதிவிட்டனர்.

அதனைப்பார்த்து, சிறுவனுக்கு உதவி செய்வதற்காக 4,855 பேர் பள்ளி வளாகத்தில் மழை என்றும் பாராமல் காத்திருந்தது மட்டுமல்லாமல், அவர்களுடைய ஸ்டெம் செல் அந்த சிறுவனுக்கு ஏற்றதாக இருக்கிறதா என்பதையும் பரிசோதனை செய்துகொண்டனர்.

சிறுவனுக்கு உதவ முன்வந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கருத்து பதிவிட்ட சிறுவனின் பெற்றோர், ஆஸ்கார் விரைவில் உடல்நலம் பெறுவான் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

சிறுவனுக்கு, 4 நாட்கள் கீமோதெரபி செய்ததில், 20 முறை ரத்த மாற்று செய்யப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்