பிரித்தானியாவில் குத்தி கொலை செய்யப்பட்ட இலங்கை மாணவர்: பெற்றோர் வெளியிட்ட உருக்கமான வார்தைகள்

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா
1592Shares

பிரித்தானியாவில் இலங்கை தமிழர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இறந்துபோன மாணவனின் பெற்றோர் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

லண்டன் Ealing ஐப் பிறப்பிடமாக கொண்ட ரிஷான் உதயக்குமார் 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் குத்தி கொலை செய்யப்பட்டார்.

தனது நண்பரின் 19 வயது சகோதரியுடன் ரிஷான் உதயக்குமார் நெருக்கமாக இருந்த காரணத்தால் இந்த கொலை நடந்துள்ளது.

Hertfordshire இல் உள்ள குறித்த பெண்ணின் வீட்டிற்கு ரிஷான் சென்றபோது அங்கு அந்த பெண்ணின் பெற்றோர் இல்லை. இந்த நிலையில் தான் ரிஷான் அப்பெண்ணுடன் இருந்துள்ளார்.

திடீரென வீட்டுக்கு வந்த அப்பெண்ணின் 16 வயது தம்பி, இந்த காட்சியை பார்த்து கோபம் கொண்டு ரிஷானை கத்தியால் 3 முறை குத்தி கொலை செய்துள்ளார். இதுதொடர்பான வழக்கு விசாரணையில் நடைபெற்று வந்த நிலையில் 16 வயதான குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரிஷானின் பெற்றோர் வெளியிட்டுள்ள உருக்கமான அறிக்கையில், எங்களது மகன் குறித்து பல்வேறு கனவுகளுடன் வாழ்ந்து வந்தோம். ஆனால் அவனின் உயிரிழப்பு எங்களை மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டது.

எங்கள் மகனுக்கு நடந்ததுபோன்று இனி யாருக்கும் நடக்கக்கூடாது. மிகவும் இளம் வயதில் அவன் எங்களை விட்டு சென்றுவிட்டான். ஒவ்வொரு பெற்றோருக்கும் ரிஷான் ஒரு சிறந்த மகன் ஆவான்.

உறவினர்களுக்கு முன்மாதிரியாக இருந்தான். அனைவரிடம் மிகவும் அக்கறையாகவும், மரியாதையாகவும் நடந்துகொள்வான். மேலும் படிப்பிலும் சிறந்து விளங்கினான்.

University of Surrey - வில் civil engineering பயின்று வந்தான், Formula One track ஆக வேண்டும் என்பதே ரிஷானின் கனவாக இருந்தது. இந்த வழக்கு விசாரணையை எங்களால் எதிர்கொள்ள இயலவில்லை . இது மிகவும் கடினமான தருணம் ஆகும்.

எங்கள் அப்பாவி மகனுக்கு முழுமையான நீதி கிடைக்கவில்லை. ஏனெனில் இந்த சமுதாயத்தில் கத்தி பயன்படுத்தி வன்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அதிகமான தண்டனை வழங்க வேண்டும். ரிஷான் குடும்பத்தை அதிகம் நேசிக்கிறான்.

அவன் இதுபோன்ற வன்முறைகளை ஒருபோதும் விரும்பதில்லை. இப்படி ஒரு சம்பவத்தால் பெற்றோர்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வாழ்க்கை மதிப்பை கற்றுக்கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்