பிரித்தானியாவில் கொலை செய்யப்பட்ட இலங்கை தமிழர் வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Report Print Vijay Amburore in பிரித்தானியா
1029Shares

பிரித்தானியாவில் இலங்கை தமிழ் வம்சாவளி இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிக்கான தண்டனை விவரத்தினை நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பிரித்தானியாவின் Watford பகுதியை சேர்ந்த ஒரு பெற்றோர் கடுமையான கட்டுப்பாடுகளுடன் தங்களுடைய குழந்தைகளை வளர்த்து வந்துள்ளனர்.

அந்த வீட்டை சேர்ந்த 19 வயது மூத்த பெண், இலங்கை தமிழ் வம்சாவளி இளைஞரான ரிஷான் உதயகுமாரை காதலித்து வந்துள்ளார். வீட்டில் இதுகுறித்து கூறினால், கட்டுப்பாடுகளுடன் இருக்கும் பெற்றோர் ஒப்புக்கொள்ளமாட்டார்கள் என நினைத்து, ரிஷான் தன்னுடைய நண்பர் என ஏற்கனவே அறிமுகம் செய்துவைத்திருந்தார்.

அதோடு ஒருமுறை ரிஷானை தன்னுடைய நண்பர்களுடன் ஒருவனாக வரவழைத்து, வீட்டில் உள்ள 16 வயது சகோதரனுக்கும் அறிமுகம் செய்து வைத்திருந்துள்ளார்.

இதற்கிடையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 7ம்திகதியன்று அந்த பெற்றோர்கள் விடுமுறையை கழிக்க வெளியூருக்கு செல்வதாகவும், அதுவரை நண்பர்கள் யாரையும் வீட்டிற்கு அழைத்து வர கூடாது எனவும் கடுமையாக கூறிவிட்டு சென்றிருக்கின்றனர்.

அதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அந்த 19 வயது பெண், மூன்று நாட்கள் கழித்து 10-ம் திகதியன்று ரிஷானை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்து அரைமணிநேரம் நெருக்கமாக இருந்துள்ளார்.

இந்த நேரத்தில் திடீரென வீட்டிற்கு வந்த அவளுடைய 16 வயது தம்பி, வேகமாக கதவை தட்டியுள்ளான். வீட்டின் அழைப்பு மணி சத்தத்தை கேட்டு பயந்துபோன அந்த பெண், ரிஷானை வீட்டின் பின் பகுதியில் ஒளித்து வைத்துவிட்டு கதவை திறந்துள்ளார்.

கதவை திறந்ததும் அக்காவை தள்ளிவிட்ட தம்பி, எங்கே அவன்? எங்கு இருக்கிறான்? உன்னுடன் யார் இருந்தது? என கேள்விகளை எழுப்பிக்கொண்டே ஆத்திரத்துடன் வீடு முழுவதும் தேடியுள்ளான்.

அப்போது வீட்டின் பின் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரிஷானை, நீளமான கத்தியால் 3 முறை சரமாரியாக குத்தியுள்ளான். இதனை பார்த்த அந்த பெண் பயத்தில் அலற ஆரம்பித்துள்ளார். சத்தம் கேட்டு ஓடிவந்த பக்கத்துக்கு வீட்டார் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், அந்த சிறுவனை கைது செய்து சிறையில் அடைத்தனர், இந்த நிலையில் வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை இன்று நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது வழக்கு விசாரணைகளை கேட்டறிந்த நீதிபதி, குற்றவாளியை 7 ஆண்டுகள் சிறுவர் சிறையில் அடைக்குமாறு கூறி உத்தரவிட்டார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்