பிரித்தானியாவில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு பொதியில் எழுதப்பட்டிருந்த வார்த்தை: நாடு முழுவதும் தீவிரமடையும் சோதனை

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

லண்டனில் மூன்று முக்கியமான இடங்களில் வெடிகுண்டு பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து இன்னும் பல இடங்களில் வெடிகுண்டுகள் இருக்க வாய்ப்பிருப்பதாக பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளது மட்டுமல்லாமல் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர்..

இந்த வெடிகுண்டுகளின் பின்னணியில் தீவிரவாதிகள் இருப்பதாக பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

Heathrow விமான நிலையம், லண்டன் நகர விமான நிலையம் மற்றும் Waterloo ரயில் நிலையம் ஆகிய 3 இடங்களில் கண்டெடுக்கப்பட்ட 3 வெடிகுண்டு பொதிகளில் அயர்லாந்து தபால் முத்திரை ஒட்டப்பட்டிருந்த காரணத்தால் அயர்லாந்து அதிகாரிகளும் இதுகுறித்த விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை இரவு இரண்டு பொதிகள் போக்குவரத்து துறை மூலம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக போக்குவரத்து மையங்கள் மற்றும் மின்னஞ்சல் அலுவலகங்களில் பணிபுரியும் பொதுமக்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் செயல்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், சந்தேகத்திற்குரிய பொதிகளை அடையாளம் காணுவதற்காக பணியாளர்களுக்கு உதவுவதற்காக வெடிகுண்டு பொதிகளில் வெளிப்புறத்தில் இருந்த படங்கள் பகிரப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

குறித்த பொதியில் ஒட்டப்பட்டருந்த தபால் முத்திரை 2018 ஆம் ஆண்டு காதலர் தினத்துக்காக அயர்லாந்து அரசால் வெளியிடப்பட்டிருந்தது.

அதில், இதயம் மற்றும் “Love Eire N என்ற வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன.

அனுப்புநர் முகவரியில் Dublin போடப்பட்டிருந்தது. குறித்த பொதி பற்றி எரிவதால் இதுவரை யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் யாரும் கைது செய்யப்படவில்லை எனவும் கூறியுள்ளனர்.

மேலும், இதுபோன்று வேறு ஏதேனும் இடங்களில் பொதிகள் இருக்கிறதா என சோதனை நடைபெற்று வருகின்ற நிலையில், மக்கள் எச்சரிக்கையாக இருக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்