Brexit விவகாரத்தில் அமெரிக்காவை சாடும் இளவரசி மேகன்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

அமெரிக்க தயாரிப்புகள் எவ்வளவு மோசமாக இருக்கும் என்று தனக்கு தெரியும் என முன்னாள் அமெரிக்க நடிகையும் இந்நாள் பிரித்தானிய இளவரசியுமான மேகன் கூறியுள்ளார்.

கலிபோர்னியாவில் பிறந்தவரான மேகன், அமெரிக்க உணவு அமைப்பு குறித்த தனது தெளிவான நிலையை விளக்கியுள்ளதோடு, அவை எவ்வளவு மோசமாக இருக்கும் என்பது தனக்கு தெரியும் என்றும் சாடியுள்ளார்.

அதே நேரத்தில், நீண்ட காலம் நீடிக்கும் விவசாய முறைகளில் முன்னோடியாக இருக்கும் தனது மாமனாரான இளவரசர் சார்லசை மேகன் புகழ் தவறவில்லை.

கடந்த வாரம், பிரெக்சிட்டுக்குப் பின் பிரித்தானியாவுடன் ஒப்பந்தம் ஒன்றை செய்ய விரும்புவதாகவும், தாங்கள் பிரித்தானிய சந்தையை அணுகுவதற்கு ஐரோப்பிய ஒன்றிய விதிகள் தடையாக இருப்பதாகவும் அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அமெரிக்காவுடன் அத்தகைய உணவு ஒப்பந்தம் ஒன்றைச் செய்தால், அமெரிக்கா தரமற்ற உணவுப்பொருட்களை பிரித்தானியாவுக்கு இறக்குமதி செய்துவிடும் என்ற அச்சம் பிரித்தானிய விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே தெரிவிக்கப்பட்டதுபோல், ஹார்மோன் ஊசி போடப்பட்ட இறைச்சி, மரபு மாற்றப் பயிர்களுடன் கிருமிகளைக் கொல்வதற்காக குளோரினால் கழுவப்பட்ட சிக்கனையும்பிரித்தானியர்கள் உண்ணும் சூழல் ஏற்படலாம் என அவர்கள் அஞ்சுகிறார்கள்.

இந்நிலையில், பிரித்தானிய அரண்மனை தரப்பில் இதுவரை யாரும் பிரெக்சிட் குறித்து வாய் திறக்காதபோது, பிரித்தானிய இளவரசர் ஹரியின் மனைவியான மேகன், பிரெக்சிட்டுக்கு பிந்தைய வர்த்தக ஒப்பந்தம் குறித்து வெளிப்படையாக பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers