ஆபாசப்படம் பார்க்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவில் ஆபாசப்பட விரும்பிகளுக்கு அதிர்ச்சி ஒன்றை அளித்துள்ளது அரசு. ஆம்! ஆன்லைனில் ஆபாசப்படம் பார்க்க விரும்புவோர் இனி பாஸ்போர்ட் இருந்தால்தான் படம் பார்க்க முடியும்.

விடயம் வேறொன்றுமில்லை, இனி இத்தகைய படம் பார்ப்போர், தங்கள் வயதை நிரூபித்தால்தான் படம் பார்க்க முடியும்.

குழந்தைகள் ஆபாச படங்களை பார்ப்பதை தடுக்கும் விதமாக, மூன்றில் ஒரு பங்கு ஆபாச விடயங்களைக் கொண்டவையாக இருக்கும் பிரித்தானிய இணையதளங்களைப் பார்வையிட, இனி வயதை நிரூபிப்பது அவசியம்.

இனி இலவச ஆபாச தளங்களைப் பார்வையிட வேண்டுமானால் கூட, ஓட்டுநர் உரிமம் அல்லது பாஸ்போர்ட் போன்ற சான்றுகள் மூலம் வயதை நிரூபித்தால் மட்டுமே அவற்றை அணுக முடியும்.

2017ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த டிஜிட்டல் எக்கானமி சட்டம் என்னும் இந்த சட்டம், பல முறை தள்ளி வைக்கப்பட்டபோதும், இம்முறை 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமுலுக்கு வருகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்