ஷூவுக்குள் பாம்பு இருப்பதை அறியாமல் 15000 கிலோ மீட்டர் விமானத்தில் பயணித்த பெண்: அடுத்து நடந்த சம்பவம்

Report Print Raju Raju in பிரித்தானியா

அவுஸ்திரேலியாவில் இருந்து ஸ்காட்லாந்துக்கு விமானத்தில் பயணித்த பெண்ணின் ஷூவில் பாம்பு ஒன்று இருந்ததை அவர் கவனிக்காமல் இருந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக அவருக்கு ஒன்றுமே ஆகவில்லை.

ஸ்காட்லாந்தை சேர்ந்தவர் மோரியா பொக்சல். இவர் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் தனது மகள் சாரா மற்றும் மருமகன் பவுல் ஆகியோரை காண அங்கு சென்றார்.

அவர்களுடன் சில நாட்கள் இருந்து விட்டு சொந்த நாட்டுக்கு மோரியா விமானத்தில் கிளம்பினார்.

விமானத்தில் சென்று கொண்டிருந்த போது அவர் அணிந்திருந்த ஷூவில் ஏதோ ஒன்று ஊர்ந்து செல்வது போல தோன்றியது.

ஆனால் அதை மோரியா கவனிக்கவில்லை. பின்னர் ஸ்காட்லாந்து வந்தடைந்த மோரியா தனது வீட்டுக்கு சென்றார்.

அப்போது தனது ஷூவை கழட்டிய போது உள்ளே பாம்பு இருந்தது.

முதலில் தனது மகள் பொம்மை பாம்பை உள்ளே விளையாட்டாக வைத்திருப்பார் என நினைத்தார் மோரியா. ஆனால் பாம்பு அசைய தொடங்கியதும் அதிர்ச்சியில் உறைந்தார் மோரியா.

அதாவது 15000 கிலோ மீட்டர் தூரத்திலான விமான பயணத்தில் மோரியாவுடனேயே அந்த பாம்பும் பயணித்துள்ளது. இதையடுத்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுத்தார் மோரியா.

அங்கு வந்த வனத்துறை ஊழியர்கள் பாம்பை பிடித்தனர். அப்போது தான் அந்த பாம்புக்கு விஷத்தன்மை கிடையாது என தெரியவந்தது.

இதன் காரணமாகவே மோரியாவின் உயிருக்கு எந்தவொரு ஆபத்தும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்