பிரித்தானியா மகராணி கையில் இருக்கும் காயத்திற்கு இது தான் காரணமா? வெளியான முக்கிய தகவல்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசெபத்தின் இடது கையில் காயம் ஏற்பட்டது போன்ற புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலான நிலையில், அதற்கு என்ன காரணம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசெபத்தை சந்திப்பதற்காக ஜோர்டான் நாட்டு மன்னர் இரண்டாம் அப்துல்லா, இளவரசர் ஹுசைன் மற்றும் ராணி ரனியா ஆகியோர் பக்கிங்காம் அரண்மனைக்கு வருகை தந்திருந்தனர்.

அப்போது அவர்கள் மகாராணி எலிசெபத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அந்த புகைப்படத்தில் மகாராணியின் இடது கையில் ஊதா நிறம் போன்று காணப்பட்டது.

அதை சற்று உற்றுப்பார்க்கையில் மகாராணியின் கையில் ஏதோ காயம் ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறியிருந்தனர்.

இந்நிலையில் பிரபல ஆங்கில மாத இதழின் மேனேஜிங் எடிட்டர் ஜோ லிட்டில், ராணி இரத்த சோகை நோய் காரணமாக சிகிச்சை பெற்று வருவதாகவும், இதனால் அவர் கையில் பேண்டேஜ் போட்டதன் காரணமாக உதா நிறத்தில் காயம் போன்று இருப்பதாக கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்