பிரித்தானிய பிரபலத்தின் வீடு அருகே இளைஞர்கள் இருவர் வெறியாட்டம்: பரிதாபமாக பறிபோன உயிர்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

மான்செஸ்டர் புறநகர் பகுதியில் 17 வயது இளைஞன் கத்தியால் கொடூரமாக தாக்கி கொல்லப்பட்ட சம்பவத்தில் இளைஞர்கள் இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பொலிசாரால் கைதான இருவரும் சம வயதினர் என தெரியவந்துள்ளது.

சம்பவம் நடந்த பகுதியானது பிரபல பிரித்தானிய கால்பந்து நட்சத்திரங்களான Paul Pogba மற்றும் Victor Lindelof ஆகியோரின் இல்லம் அமைந்துள்ளது.

இக்கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார், குற்றுயிராக காணப்பட்ட இளைஞரை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த இளைஞர் மரணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து இளைஞரின் உறவினர்களுக்கு பொலிசார் தகவல் அளித்துள்ளனர்.

கொலை சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல் தெரியவரும் பொதுமக்கள் பொலிசாருக்கு உதவ முன்வர வேண்டும் எனவும் தகவல் வெளியிட்டுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்