நீல நிறமாக மாறியிருந்த ராணியின் கை: பெரும் கவலையில் இணையதளவாசிகள்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

ஜோர்டான் நாட்டு அரச குடும்பத்தினரை சந்திக்கும் பொழுது ராணியின் கை நீல நிறத்தில் மாறியிருந்ததால் இணையதளவாசிகள் பெரும் கவலை தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.

பிரித்தானிய ராணியை சந்திப்பதற்காக ஜோர்டான் நாட்டு மன்னர் இரண்டாம் அப்துல்லா, இளவரசர் ஹுசைன் மற்றும் ராணி ரனியா ஆகியோர் பக்கிங்காம் அரண்மனைக்கு நேற்று வருகை தந்திருந்தனர்.

அங்கு பிரித்தானிய ராணியும், இளவரசி அன்னேவும் கைகொடுத்து அவர்களை வரவேற்றனர். இந்த நிகழ்வின் போது, ராணியி கையில் நீல நிறத்தில் பெரிய அடையாளம் இருப்பதை அரண்மனை ரசிகர்கள் பார்த்துள்ளனர்.

வயது முதிர்வு உள்ளிட்ட காரணங்களால், இணையதளவாசிகள் பலரும் என்னவென்று தெரியாமல் பெரும் கலக்கத்தில் ராணி குறித்து கவலை தெரிவிக்க ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் நீல நிறத்தில் மாறியிருப்பது குறித்து மருத்துவர் ஒருவர் கூறுகையில், ராணியின் கையில் சிறிய காயம் ஏற்பட்டிருக்கலாம். அதனால் தான் அவரது இடது கை நீல நிறமாக மாறியிருக்கிறது. வயது முதிர்வு மற்றும் மெல்லிய தோல் காரணமாக அந்த அடையாளம் முழுவதும் குணமடைய சிறிது தாமதமாகலாம் என விளக்கம் கொடுத்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்