லண்டன் பேருந்தில் கேட்பாரற்று கிடந்த £300,000... கண்டெடுத்த துப்புரவு தொழிலாளி: என்ன செய்தார் தெரியுமா?

Report Print Arbin Arbin in பிரித்தானியா

லண்டனில் பேருந்து ஒன்றில் கேட்பாரற்று கிடந்த £300,000 தொகையை துப்புரவு தொழிலாளி ஒருவர் கண்டெடுத்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார்.

லண்டனில் பேருந்து பயணம் மேற்கொண்ட பயணி ஒருவர் £300,000 தொகையை மறதியால் கைவிட்டு சென்றுள்ளார்.

இந்த நிலையில் அந்த பேருந்தில் பயணம் செய்த துப்புரவு தொழிலாளி ஒருவர் குறித்த தொகையை கண்டெடுத்துள்ளார்.

கண்டெடுத்த தொகையுடன் அந்த நபர் தனது வாழ்க்கையை சிறப்பாக்கி கொள்ளலாம். ஆனால் அவர் எடுத்த முடிவு தற்போது பலராலும் பாராட்டைப் பெற்று வருகிறார்.

கண்டெடுத்த தொகையுடன் உடனடியாக பொலிசாரை அணுகிய அவர் அந்த பணத்தை ஒப்படைத்து, நடந்தவற்றை விளக்கியுள்ளார்.

லண்டன் பேருந்தில் இதுபோன்று பல பொருட்கள் துப்புரவு தொழிலாளர்களால் கண்டெடுக்கப்படுவது வாடிக்கை என கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்