ஓய்வு பெற்றவர்களுக்கு ஆணுறைகள்! பிரித்தானிய அரசு அதிரடி

Report Print Balamanuvelan in பிரித்தானியா

அதிகரித்து வரும் விவாகரத்துகளும் ஆன்லைன் டேட்டிங் சமாச்சாரங்களும் ஓய்வு பெற்றவர்களிடையே பாலியல் நோய்கள் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளதையடுத்து அவர்களுக்கு ஆணுறைகள் வழங்க பிரித்தானிய அரசின் மருத்துவத் துறை முடிவு செய்துள்ளது.

பிரித்தானியாவின் Derbyshireஇல் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

2016இல் 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் பாலியல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,411 ஆக இருந்தது, 2017இல் அது 1,608ஆக அதாவது, 14 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

ஆன்லைன் டேட்டிங் தளங்கள் மூலமாக எளிதாக பாலுறவுக்கு வாய்ப்புகள் கிடைப்பதும், அப்படி கிடைக்கும் பெண்களை தங்களுக்குள் மாற்றிக்கொள்வதும் பாலியல் நோய்க்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன.

தான் சந்தித்த நோயாளிகளில் ஒருவருக்கு வயது 91 என்று தெரிவித்துள்ள மருத்துவர் ஒருவர், வயதாவதால் உங்களுக்கு பாலியல் நோய்க்கான நோய் எதிர்ப்பு சக்தி வந்து விடாது என்றும் ஆணுறை பயன்படுத்துவதும், மருத்துவ பரிசோதனை செய்வதும் இந்த வயதிலும் அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்