செய்த குற்றத்திற்கு இந்திய தோழி மீது பழி போட்ட பிரித்தானிய இளம்பெண்: கடிந்து கொண்ட நீதிபதி

Report Print Balamanuvelan in பிரித்தானியா

தான் செய்த குற்றத்திலிருந்து தப்புவதற்காக தனது இந்திய தோழி ஒருவர் மீது போலியாக பழி சுமத்திய பிரித்தானிய இளம்பெண்ணுக்கு தண்டனை விதித்ததோடு, அவரை நீதிமன்றம் கடிந்தும் கொண்டுள்ளது.

பர்மிங்காமைச் சேர்ந்த Nitasha Sahota (31), 40 மைல் வேகத்தில் பயணிக்க வேண்டிய சாலையில், 52 மைல் வேகத்தில் காரை ஓட்டியதாக அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

ஆனால் அதற்கு பதிலளித்த Nitasha, அந்த நேரத்தில் தான் காரை ஓட்டவில்லை என்றும் இந்தியாவிலிருந்து வந்திருந்த தனது தோழிதான் தனது காரை ஓட்டினார் என்றும் தெரிவித்தார்.

அந்த இந்திய தோழியை தொடர்பு கொள்ள முயன்றால், தனது இமெயில்களுக்கு அவர் பதிலளிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

ஆனால் பொலிசார் Nitasha குறிப்பிட்ட தினத்தில் யாராவது இந்தியாவிலிருந்து வந்தார்களா, திரும்பிச் சென்றார்களா என்று கணினி உதவியுடன் சோதித்த போது அப்படி யாரும் வரவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மீண்டும் விசாரித்ததில் Nitasha பொய் சொல்லியிருப்பது தெரிய வந்தது.

Nitasha முட்டாள்தனமான முடிவு எடுத்ததாக கண்டனம் தெரிவித்த நீதிபதி, இத்தகைய குற்றங்கள் நீதியின் இதயத்திலேயே குத்துவதாக வருத்தம் தெரிவித்தார்.

நீதிபதி Nitashaவுக்கு நான்கு மாதங்கள் சிறைத்தண்டனையும், 425 பவுண்டுகள் அபராதமும் விதித்தார் என்றாலும் தற்போதைக்கு அவர் சிறைக்கு செல்ல வேண்டியதில்லை.

இரண்டு வருடங்களுக்குள் Nitasha மீண்டும் தவறிழைத்தால் அவர் சிறைக்கு செல்ல நேரிடும்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்