கணவனின் குடலை பாதுகாத்து வைத்திருக்கும் பெண்: இதற்காகத்தானாம்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு பெண் இறந்துபோன தன் கணவனின் குடலை பத்திரமாக பாதுகாத்து வைத்துள்ளார்.

பலர் தங்களுக்கு பிரியமானவர்களின் நினைவாக அவர்கள் பயன்படுத்திய பொருட்களை பாதுகாத்து வைப்பதுண்டு.

பிரித்தானியாவின் Chelmsfordஐச் சேர்ந்த Tina Loudfoot தனது கணவரான Derek Loudfootஇன் குடலை பத்திரமாக பாதுகாத்து வைத்திருக்கிறார். Derek Loudfoot ஒரு நகைச்சுவை உணர்வு மிக்க மனிதர்.

ஒருமுறை உடல் நலமில்லாதபோது அவரது குடலின் ஒரு பாகத்தை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்ற, அதை ஒரு பாட்டிலில் ஃபார்மால்டிஹைடில் போட்டு பத்திரமாக வைத்துக் கொண்டார் Derek.

வேடிக்கைக்காக எங்கு சென்றாலும் அந்த பாட்டிலை கூடவே எடுத்துச் செல்வது Derekஇன் வழக்கம்.

சிலர் அதைப் பார்த்துவிட்டு அவரிடம் வந்து அது என்ன என்று கேட்பார்கள், சிலர் முகம் சுழித்து சென்று விடுவார்கள்.

அவர் இறந்தபின், தாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்ததன் நினைவாக தனது கணவரின் குடலை பத்திரமாக வைத்திருக்கிறார் Tina.

தான் இறக்கும்போது தன் குடலையும் தன்னுடன் புதைத்து விட வேண்டும் என்று கூறினாராம் Derek.

ஆனால் அதை தன்னுடன் வைத்துக் கொள்ள விரும்பி, தான் வைத்துக் கொண்டதை தன் கணவர் தவறாக எண்ணமாட்டார் என்று கூறி, அவரது குடலை பத்திரமாக வைத்திருக்கும் Tina, தான் இறக்கும்போது தன் கணவரின் குடலை தன்னுடன் புதைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers