பிரித்தானியாவுக்கு உணவுப்பொருட்கள் வழங்க தயார்: ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிவிப்பால் சர்ச்சை?

Report Print Balamanuvelan in பிரித்தானியா

ஒப்பந்தங்கள் எதுவுமின்றி பிரெக்சிட் நிறைவேற்றப்படும் பட்சத்தில், பிரித்தானியா பட்டினியால் வாட விடமாட்டோம், உணவுப்பொருட்கள் வழங்குவோம் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஒப்பந்தங்கள் எதுவுமின்றி பிரெக்சிட் நிறைவேற்றப்படும் பட்சத்தில், பிரித்தானிய லொறிகளும், விமானங்களும் ஐரோப்பாவிற்குள் அனுமதிக்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் திட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.

மார்ச் 29ஆம் திகதி பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேறியபின், பிரித்தானியாவில் பெரும் குழப்பங்கள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, குறைந்தபட்சம் பல மாதங்களுக்கு அடிப்படை விமான மற்றும் சாலை இணைப்புகள் அனுமதிக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் தெரிவித்துள்ளது.

ஒப்பந்தங்கள் எதுவுமின்றி பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேறினால், பிரித்தானியா தனிமையாக்கப்படும், என்ற ஒரு கருத்து உலவிவரும் நிலையில், அதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த அறிக்கை பேரடியாக அமைந்துள்ளது.

இந்த திட்டம் ஒரு குறுகிய கால திட்டம் என்றாலும், அதனால் ஐரோப்பாவில் பிரித்தானிய விமானங்கள் தரையிறங்குவதற்கும், லொறிகள் சாலைகளில் பயணிப்பதற்கும் தடை உருவாகும் பிரச்சினை தவிர்க்கப்பட உள்ளது.

அதேபோல் திடீரென உணவுத்தட்டுப்பாடு ஏற்படும் நிலையில், பிரித்தானியாவுக்கு உணவுப்பொருட்கள் அனுப்பவும் தயாராக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றிய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் North West Leicestershire நாடாளுமன்ற உறுப்பினரான Andrew Bridgen இது ஐரோப்பிய ஒன்றியத்தின் கடைசி பயமுறுத்தும் ஆயுதம் என்கிறார்.

ஐரோப்பிய ஒன்றியம் பிரித்தானியாவுக்குள் உணவு பொருட்கள் வருவதற்கு சட்ட விரோதமாக தடைகளை ஏற்படுத்தினால் மட்டுமே பிரித்தானியாவில் உணவுத்தட்டுப்பாடு ஏற்படும் என்கிறார் அவர்.

இது உலக வர்த்தக அமைப்பின் விதிகளை மீறும் மற்றும் சர்வதேச விதிகளுக்கு முரணான செயலாகும் என்கிறார் அவர்.

இது வேடிக்கையான ஒரு விடயம் என்று கூறும் Andrew, அப்படி அவர்கள் தடைகளை ஏற்படுத்துவார்களானால், ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு சர்வதேச ஒப்பந்தம் செய்து கொண்டதற்கு என்ன அர்த்தம் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers