பிரித்தானியாவில் மீண்டும் உயிர்பெற்று எழும் பயங்கரவாத அமைப்பு: நிபுணர்கள் கடும் எச்சரிக்கை!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவில் முக்கிய குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதை அடுத்து தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு மீண்டும் உயிர் பெற்று எழும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அல்-முஹாஜிரூன் என்னும் பயங்கரவாத அமைப்பானது 1990-களில் நிறுவப்பட்டது. பிரித்தானியாவில் பல்வேறு தாக்குதல்களுக்கு காரணம் என கூறப்பட்டு வந்த இந்த அமைப்பிற்கு 2006-ம் ஆண்டில் தடை விதிக்கப்பட்டது.

இதனை 51 வயதாகும் தீவிரவாத பிரச்சாரகர் அஞ்ஜெம் சவுத்ரி நிறுவியிருந்தார். இந்திய வம்சாவளி ஐஎஸ் அமைப்பின் ஆதரவாளர் சித்தார்த்த தார், அபு ருமாய்ஷா ஆகியோருடன் நெருக்கமான தொடர்பு கொண்டவர்.

அஞ்ஜெம் சவுத்ரி கடந்த அக்டோபர் மாதம் கடும் நிபந்தனைகளுடன் சிறையில் இருந்து வெளியில் அனுப்பப்பட்டார்.

இந்த நிலையில் ‘ஹோப் நாட் ஹேட்’ என்ற தீவிரவாத எதிர்ப்பு குழு தன்னுடைய எச்சரிக்கையில், தடை செய்யப்பட்ட அல்-முஹாஜிரூன் என்னும் பயங்கரவாத அமைப்பு மீண்டும் உயிர் பெற்று வருகிறது.

கடும் எச்சரிக்கையுடன் வெளியில் அனுப்பப்பட்டாலும், லண்டன் வீதிகளில் இளைஞர்களை கவரும் விதமாக மீண்டும் பிரச்சாரங்களில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.

இது முன்பு இருந்தது போன்று வலுவாக இல்லாவிட்டாலும் கூட, இந்த அமைப்பு இன்றும் கூட மிகப்பெரிய அழிவு சக்தி என எச்சரித்துள்ளது.

இதுகுறித்து கூறியுள்ள பெருநகர பொலிஸ் உதவி ஆணையர் நீல் பாசு, முஹஜிரின் நடவடிக்கைகளை அடையாளம் கண்டு தடுப்பதற்காக, நாங்கள் பிரித்தானியாவை சுற்றி பொலிஸ் படைகளுடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம். எனவே புதிய உறுப்பினர்களை அல்லது ஒரு குழுவினராக செயல்படுவதற்கு வாய்ப்பு இருக்காது என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers