பிரித்தானியாவில் குடியேறிய தம்பதி: மனைவியின் செயலால் ஆத்திரமடைந்த கணவன்... நேர்ந்த விபரீத சம்பவம்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் ஈரானை சேர்ந்த தம்பதி குடியேறிய நிலையில், கணவர் தொடர்ந்து அங்கு வசிக்க மனைவி ஆதரவு தராத ஆத்திரத்தில் அவரை கொலை செய்த கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானை சேர்ந்தவர் டனா அப்துல்லா (35). இவர் தனது மனைவி அவண் நஜ்மதீன் (32) உடன் பிரித்தானியாவுக்கு குடியேறிய நிலையில் Staffordshire கவுண்டியில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் அப்துல்லா தொடர்ந்து பிரித்தானியாவில் தங்குவதற்கான குடியுரிமை விண்ணப்பம் தொடர்பாக அவருக்கு ஆதரவளிக்க நஜ்மதீன் மறுத்துள்ளார்.

மேலும், கணவரை பிரிந்து வேறு இடத்தில் சென்று நஜ்மதீன் தங்கியுள்ளார்.

இதனால் மனைவி மீது ஆத்திரத்தில் இருந்த அப்துல்லா கடந்தாண்டு அக்டோபர் 1ஆம் திகதி மனைவி இருப்பிடத்துக்கு சென்று சமையலறையில் இருந்த கத்தியால் நஜ்மதீனை உடலின் பல இடங்களில் குத்தி கொலை செய்துள்ளார்.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் நஜ்மதீன் சடலத்தை கைப்பற்றிவிட்டு அப்துல்லாவை கைது செய்தனர்.

அவர் மீதான வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

அப்துல்லா மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன.

இதையடுத்து வரும் ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி அப்துல்லாவின் தண்டனை விபரங்கள் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...