மேகன் ஒன்றும் டயானா இல்லை! மேகனுக்கு வக்காலத்து வாங்கிய பிரபலத்தை வெளுத்து வாங்கும் பத்திரிகையாளர்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

சமீபத்தில் பிரபல நடிகரான ஜார்ஜ் க்ளூனி, இளவரசி மேகன், டயானாவைபோலவே துரத்தப்படுவதாக கூறியிருந்தார்.

அவருக்கு சரியான பதிலளிக்கும் விதமாக, பிரித்தானியாவின் பிரபல பத்திரிகையாளரான Piers Morgan, மேகன் ஒன்றும் டயானாவும் இல்லை, டயானாவை பத்திரிகையாளர்கள் துரத்தினார்கள், மேகனை துரத்துவது பத்திரிகையாளர்கள் அல்ல, அவரால் கைவிடப்பட்ட அவரது சொந்த குடும்ப உறுப்பினர்கள்தான் என்று கூறியுள்ளார்.

ஹரி மேகன் தங்கள் திருமணத்தையடுத்து ஒரு ஆடம்பரமான பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த விருந்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 250 பிரபலங்கள் மட்டும் அழைக்கப்பட்டிருந்தார்கள்.

அந்த அழைப்பில் ஹரியின் நீண்டகால நண்பர்கள் மூன்று பேரின் பெயர்கள் இல்லை. அதற்கு பதில், நடிகர்களும், பிரபலங்களும், விளையாட்டு வீரர்களும் அந்த இடத்தைப் பிடித்திருந்தார்கள்.

மணப்பெண்ணான மேகனின் தந்தை கூட அதில் இல்லை. இப்போது அந்த திருமண விருந்திற்கு அழைக்கப்பட்டிருந்தவர்களில் ஒருவரான ஜார்ஜ் க்ளூனி மேகனுக்கு வக்காலத்து வாங்கிப் பேசியிருக்கிறார்.

எனவே அவருக்கு பதிலடி கொடுத்துள்ள Piers Morgan, மேகன் ஹரியைத் திருமணம் செய்யும்போது டயானாவைப்போல அவருக்கு 19 வயது அல்ல, அவர் 35 வயது விவாகரத்தான ஒரு பெண்.

தன்னை விட இளைய ஹரியை கைப்பிடிக்கும்போது, தான் அனுபவிக்க இருக்கும் ராஜ போக சுகங்கள் எல்லாவற்றையும் அறிந்தே அவர் வந்தார், வந்து புகழையும் அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

ஆனால் அவரைப் போய் டயானாவுடன் ஒப்பிடக்கூடாது. டயான உலகப்புகழ் பெற்ற ஒரு பிரபலம், மேகன் தற்போது அரண்மனையில் வாழும் மூன்று பிரபலங்களில்கூட ஒருவர் இல்லை. அதனால் ஜார்ஜ் க்ளூனி கூறியது தவறு.

இரண்டாவதாக அவரை துரத்துவது பத்திரிகையாளர்கள் அல்ல, எந்த குடும்பத்தை அவர் புறக்கணித்தாரோ அந்த குடும்பத்தார்தான் அவரைத் துரத்துகிறார்கள்.

தன் திருமணத்திற்கு முறையாத அழைக்காத குடும்பத்தார். மேகனின் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது கூட, மேகனும் ஹரியும் அவரை சென்று பார்க்கவில்லை. ஒரு மருமகன் தனது மாமனாரை முறைப்படி சென்று சந்திக்கவில்லை.

இப்படி அவரால் புறக்கணிக்கப்பட்ட அவரது உறவினர்கள், ஏமாற்றத்தால் அவரை துரத்துகிறார்களேயொழிய பத்திரிகையாளர்கள் அவரைத் துரத்தவில்லை.

ஜார்ஜ் க்ளூனி ஒரு நல்ல நண்பராக இருப்பார் என்றால், தனது நண்பர் ஹரியையும் அவரது மனைவி மேகனையும் விமானத்தில் ஏற்றி, சென்று, உங்கள் தந்தையைப் பார்த்து வாருங்கள் என்று அனுப்பியிருப்பார்.

அவர் நல்ல நண்பரா, அல்லது மேகன் சமீபத்தில் கூறிய தான் அதிகம் அக்கறை காட்டும் பிரபலங்களில் ஒருவரா என்று கேள்வி எழுப்பியுள்ளார் Piers Morgan.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers