கோமாவிலிருந்து கண்விழித்த பெண்ணுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

வயிற்றுப்பகுதியில் நோய்த்தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு இளம்பெண், கோமாவிலிருந்து கண் விழித்தபோது தன் அருகிலிருந்த குழந்தையைக் கண்டு இன்ப அதிர்ச்சிக்குள்ளானார்.

Blackpoolஐச் சேர்ந்த Lisa Davey (27) வயிற்றில் நோய்த்தொற்று ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Lisaவில் நிலைமை வேகமாக மோசமாகவே, அவரது உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழந்து கொண்டே வந்தன.

அவரது வயிறு வீங்கியிருப்பதைக் கண்ட மருத்துவர்கள், அது அவரது நோய்த்தொற்றின் காரணமாக இருக்கலாம் என்று கருதி ஸ்கேன்செய்து பார்க்கும்போதுதான் தெரிந்தது Lisa கர்ப்பமாக இருக்கிறார் என்பது.

தாயையும் சேயையும் காப்பாற்ற முடிவு செய்த மருத்துவர்கள், சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையைப் பிரித்தெடுத்து, குழந்தைகள் நல மருத்துவமனை ஒன்றில் வைத்து சிகிச்சையளிக்கலாயினர்.

தீவிர சிகிச்சைக்குப்பின் கண் விழித்த Lisa, தன் அருகே படுக்க வைக்கப்பட்டிருந்த குழந்தையைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் மருத்துவர்கள் நடந்ததை விளக்கிய பின்னர்தான், தான் கர்ப்பமாக இருந்ததும், சுய நினைவின்றியே அழகான ஒரு பெண் குழந்தைக்கு தாயானதும் Lisaவுக்கு தெரிய வந்தது.

தனது குழந்தைக்கு Danielle என்று பெயர் வைத்திருக்கிறார் Lisa.

இவ்வளவு நாட்களாக தான் சுய நினைவின்றி இருந்தபோது, குறை பிரசவத்தில் பிறந்த தன் குழந்தையை, கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்ட Danielle McLardie (33) என்ற நர்ஸ் பெயரைத்தான் Lisa தன் குழந்தைக்கு வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers