குழந்தைகளின் கண்முன்னே விரட்டி கொலை செய்யப்பட்ட தாய் வழக்கில் அதிரடி திருப்பம்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவில் பாடசாலை அருகே குழந்தைகளின் கண்முன்னே தாய் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், முன்னாள் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தின் சர்ரே பகுதியில் அமைந்துள்ள பாடசாலையில் இருந்து தன்னுடைய இரண்டு குழந்தைகளை அழைத்து வருவதற்காக 39 வயதான அலின்னி மெண்டீஸ் நடந்து சென்றுகொண்டிருந்துள்ளார்.

அப்போது அங்கு காரில் வந்த மர்ம நபர் திடீரென அலின்னியை விரட்டி சென்று கத்தியால் குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அலின்னி மெண்டீஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தீவிரமான விசாரணை மேற்கொண்ட பொலிஸார், சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து 1 கிமீ தூரத்தில் வைத்து குற்றவாளியை பிடித்தனர்.

பின்னர் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், 41 வயதான ரிகார்டோ கேடீன்ஹோ என்பதும், அவர் கொலை செய்யப்பட்ட அலின்னியின் முன்னாள் கணவர் என்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த பொலிஸார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து Epsom பகுதியில் உள்ள ஆலயத்தில் பாதிரியாராக பணிபுரிந்து வரும் Gianom கூறுகையில், அலின்னிக்கு 3 ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது. தினமும் அதிகாலை 4 மணிக்கு தன்னுடைய குழந்தைகளை அழைத்துக்கொண்டு ஆலயத்திற்கு வருவார்.

கடந்த 1 மாதத்திற்கு முன்னதாக அவருடைய கணவரை விட்டு பிரிந்து Streatham பகுதியில் குடியேறினர். அங்கு தனக்கு பாதுகாப்பு இருப்பதாக அலின்னி உணர்ந்தார் என தெரிவித்துள்ளார்.

மேலும், அவர்கள் பிரிந்ததற்கான காரணம் குறித்து தெரியவில்லை. ஆனால் கணவர் மேல் உள்ள பயத்தால் தான் அங்கிருந்து பிரிந்து வந்தார் என அக்கம்பக்கத்தினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர் .

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers