இளவரசி மேகனை தற்பெருமைக்காரி என திட்டிய சமந்தா: கொந்தளித்த அரச குடும்பத்து ரசிகர்கள்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

மேகன் ஒரு தற்பெருமைக்காரி என இளவரசி குறித்து சர்ச்சையான கருத்துக்களை பேசியிருக்கும் சமந்தாவிற்கு எதிராக இணையதளவாசிகள் பலரும் கடும் கண்டன கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பிரித்தானிய இளவரசி மேகன் தன்னுயடைய தந்தையுடன் ஏற்பட்டிருக்கும் கருத்து வேறுபாடு பற்றி கடிதம் ஒன்றினை இந்த வாரத்தில் எழுதியிருந்தார்.

அந்த கடிதத்தின் முழு தகவல்களும் நேற்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

தாமஸிற்கு எழுதப்பட்டிருந்த அந்த கடிதத்தில், உங்களுடைய மற்றொரு மகள் கூறும் பொய்கள் அனைத்தையும் நம்பிக்கொண்டு தொலைக்காட்சிகளில் கடுமையாக பேசி வருகிறீர்கள்.

உங்கள் நடவடிக்கைகள் என் இதயத்தை ஒரு மில்லியன் துண்டுகளாக உடைத்துவிட்டன. தயவு செய்து அமைதியாக வாழ்க்கையினை வாழ விடுங்கள் என எழுதியிருந்தார்.

இந்த நிலையில் கடிதம் குறித்து தன்னுடைய புதிய ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள சமந்தா, மேகன் ஒரு தற்பெருமைக்காரி என குறிப்பிட்டிருந்தார்.

இதனை பார்த்த இணையதளவாசிகள் பலரும் கடும் பதில்களை கொடுத்து வந்தனர்.

அதில் ஒரு பெண், உங்களுக்கு வயது 60 ஆக போகிறது. உங்களை நீங்கள் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என பதிவிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த சமந்தா, என்னிடம் 600 மில்லியன் பணம் இருந்தால் மேகன் என்னை கவனிப்பாள் என எதிர்மறையாக தாக்கினார்.

மற்றொரு பெண், மேகன் ஒன்றும் அவளுடைய அப்பாவால் பிரபலமடையவில்லை என பதிவிட்டிருந்தார்.

இதுபோன்று இணையதளவாசிகள் பலரும் சமந்தாவிற்கு கடுமையான பதில்களை கொடுத்து வருகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers