பிரித்தானிய தாயின் சடலத்தை 1 வருடமாக மெத்தைக்கு கீழ் மறைத்து வைத்திருந்த மகள்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

ஸ்பெயின் நாட்டில் இறந்த தாயின் சடலத்தை ஒரு வருடமாக மெத்தைக்கு அடியில் மறைத்து வைத்திருந்த மகளிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஸ்பெயின் நாட்டின் மார்பெல்லா பகுதியில் உள்ள வீட்டில் தன்னுடைய தாய், பாட்டியின் சடலத்தை வீட்டில் மறைத்து வைத்திருப்பதாக 15 வயது சிறுமி பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்ட போது, பதப்படுத்தப்பட்டிருந்தது பிரித்தானியாவை சேர்ந்த Valerie Butroid (71) என்பதும், அவர் கடந்த ஆண்டு மார்ச் 12-ம் திகதி இறந்ததும் தெரியவந்தது.

ஆனால் அவரை எதற்காக பதப்படுத்தி வைத்திருந்தார்கள் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. இந்த நிலையில் அவருடைய உடலை மெத்தைக்கு அடியில் மறைத்து வைத்திருந்த, அவருடைய மகள் லூயிஸிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து அக்கம்பக்கத்தை சேர்ந்தவர்கள் கூறுகையில், சில வருடங்களுக்கு முன்பு லூயிஸ் கணவர் இறந்துவிட்டார். அன்று முதலே அவர் அதிகம் தனிமையை தேடினார். அடிக்கடி இந்த பகுதியில் துர்நாற்றம் வீசும்.

நாய்களும், பூனைகளும் சுற்றித்திரிவதால் அந்த நாற்றமாக இருக்கலாம் என நாங்களும் நினைத்துக்கொண்டோம் என தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் உடலை ஆய்வு செய்த பொலிஸார், கொலை செய்யப்பட்டதற்கான எந்த தடயமும் உடலில் இல்லாததால், இயற்கையாக இறந்திருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers