அயர்லாந்தை சேர்ந்த புற்றுநோய் பாதிக்கப்பட்ட நபருக்கு லாட்டரியில் €500,000 பரிசு விழுந்த நிலையில் பணத்தை வைத்து ஆரோக்கியமான வாழ்க்கையை வாங்க முடியாது என அவர் கூறியுள்ளார்.
சார்லி மீஹன் (84) என்ற நபருக்கு கடந்த 2012-ல் புற்றுநோய் ஏற்பட்டது.
ஆனால் மனம் தளராமல் சார்லி புற்றுநோயை எதிர்த்து போராடினார். அதன் விளைவாக சமீபத்தில் அவருக்கு நோய் குணமானது.
இந்நிலையில் சார்லி வாங்கி லாட்டரி சீட்டுக்கு பம்பர் பரிசாக €500,000 விழுந்துள்ளது.
இது குறித்து சார்லி கூறுகையில், புற்றுநோயை நான் ஜெயித்த போதே எனக்கு லாட்டரியில் பரிசு கிடைத்த மகிழ்ச்சி ஏற்பட்டது.
தற்போது €500,000 பரிசு லாட்டரியில் கிடைத்துள்ளது, அந்த பணத்தை நான் இந்த வயதில் பெரிய விடயமாக எண்ணவில்லை.
எனக்கு வேண்டியதெல்லாம் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்வு தான், ஆனால் பணத்தால் அதை வாங்க முடியாது.
என்னிடம் ஏற்கனவே வீடு மற்றும் கார் உள்ளது, இந்த பணத்தை வைத்து என்ன செய்வது என முடிவு செய்யவில்லை என கூறியுள்ளார்.