Brexitஐ எதிர்த்து நிர்வாணமாக பேட்டி கொடுத்த பிரித்தானிய பெண்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

கேம்பிரிட்ஜின் பொருளாதார நிபுணரான ஒரு பெண் பிரெக்சிட்டுக்கு தன் எதிர்ப்பைக் காட்டும் வகையில் நிர்வாணமாக வானொலி ஒன்றிற்கு பேட்டியளித்த சம்பவம் பிரித்தானியாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கேம்பிரிட்ஜின் பொருளாதார நிபுணரான Dr Victoria Bateman, பிரபல வானொலி ஒன்றிற்கு பேட்டியளிப்பதற்காக வந்திருந்தார்.

பேட்டிக்காக ஒலிப்பதிவு அறைக்குள் செல்லும் முன் உடை களைந்த Victoria, நிர்வாணமாக வந்து பேட்டி கொடுப்பதற்காக அமர்ந்தார்.

பேட்டி எடுத்தவர் சங்கடத்தில் நெளிந்தவாறே, சரி பிரெக்சிட்டுக்கும் நிர்வாண பேட்டிக்கும் என்ன தொடர்பு என்று கேட்க, தனது மார்பில் எழுதியிருந்த வாசகத்தைக் காட்டினார் Victoria.

அவரது முன் பக்க உடலில், பிரெக்சிட் பிரித்தானியாவை நிர்வாணமாக்கி விடுகிறது (Brexit Leaves Britain Naked) என்று எழுதியிருந்தது.

என்னைப் பார்க்கும் பலர், இந்த பெண் ஒரு முட்டாள் என்று கூட சொல்லலாம், ஆனால் நான் பிரித்தானியாவுக்கு பிரெக்சிட்டால் நேரவிருக்கும் பொருளாதார பிரச்சினைகளுக்காகவும், பெண் உடல் என்பது அவமானமில்லை என்பதைக் காட்டுவதற்காகவும் இதைச் செய்கிறேன் என்றும் கூறினார் Victoria.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers