லண்டன் வர ஆசைப்பட்டு மர்ம கும்பலிடம் சிக்கிய திருநங்கை! எப்படி இருக்கிறார்? நெஞ்சை உருக்கும் சம்பவம்

Report Print Santhan in பிரித்தானியா

மத்திய அமெரிக்காவின் குவாத்தமாலா நாட்டைச் சேர்ந்த திருநங்கை ஒருவர், இப்போது லண்டனில் வசித்து வரும் நிலையில், அவர் வீட்டை விட்டு வெளியேறிய போது அனுபவித்த துன்பங்கள் பற்றி பகிர்ந்துள்ளார்.

குவாத்தமாலா நாட்டைச் சேர்ந்தவர் Sasha Taylor(திருநங்கை). 35 வயதான இவர் இப்போது லண்டனில் Hawkar Jwamer(33) என்பவருடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் இவர் எப்படி லண்டன் வந்தார்? திருநங்கையாக இவர் அனுபவித்த துன்பங்கள் என்ன என்பது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், நான் என்னுடைய எட்டு வயதில் ஒரு வித வித்தியாசமான உணர்வை உணர்ந்தேன். அப்போது உறவினரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன்.

என்னுடைய நடவடிக்கைகள் அப்பாவிற்கு பிடிக்கவில்லை. சகோதர் மற்றும் சகோதரிகளும் என்னை ஒதுக்கினர். ஆனால் நான் என் அம்மாவை எப்போதுமே நம்பி இருந்தேன். அவர் எனக்கு மிகவும் நெருக்கமாக இருந்தார்.

ஒரு சில சமயங்களில் நான் என் சகோதரியின் உடைகளை எல்லாம் அணிந்து விளையாடியுள்ளேன், அப்போது என் அம்மா சிரிக்க தான் செய்தார்களே தவிர ஒதுக்கவில்லை. இருப்பினும் தன்னுடைய நடவடிக்கையால் அதிக இன்னல்களை சந்தித்தேன்.

இதனால் கடந்த டிசம்பர் மாதம் 2016-ஆம் ஆண்டு நாட்டை விட்டு வெளியேறி லண்டனுக்கு செல்ல முடிவு செய்துள்ளார். அப்போது இவரைக் கண்ட சிலர் தாங்கள் உதவுவதாக கூறியுள்ளனர்.

இதனால் அவர்களை நம்பிச் சென்ற போது, அவர்களால் கிரீஸ், ஸ்பெயினுக்கு கடத்தப்பட்டார். அவர்களால் பல துன்புறுத்தலுக்குள்ளான அவர், அப்போது லண்டன் செல்வதற்காக வைத்திருந்த பணம், ஆவணங்கள் எல்லாவற்றையும் மிஸ் செய்தார்.

அதுமட்டுமின்றி அவர்கள் எங்களிடமிருந்து தப்பி நீ பொலிசுக்கு சென்றால், பொலிசார் உன்னை உங்கள் நாட்டிற்கு அனுப்பிடுவார்கள், அதன் பின் உன் நாட்டில் நீ கொலை செய்யப்படுவாய் என்று மிரட்டியுள்ளனர்.

இதனால் அவர்களிடமிருந்து ஒரு வழியாக தப்பிய போது, ஸ்பெயினில் இருந்த இரண்டு பெண்கள் இவருக்கு உதவியுள்ளனர். அவர்கள் உதவியுடன் கடந்த பிப்ரவரி மாதம் 2017-ஆம் ஆண்டு லண்டனுக்கு வந்துள்ளார்.

அதன் பின் தற்போது Hawkar Jwamer(33) என்பவருடன் வாழ்ந்து வருகிறார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers