லண்டனில் பட்டப்பகலில் இரயிலில் பயணிகளிடம் கத்தி முனையில் பணம் பறித்த இளைஞன்! வெளியான அதிர்ச்சி வீடியோ

Report Print Santhan in பிரித்தானியா

பயணிகள் இரயில் ஒன்றில், இளைஞன் கத்திமுனையில் அங்கிருந்த பயணிகளிடம் இருந்த பொருட்களை திருடிச் சென்ற சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

பிரித்தானியா தலைநகர் லண்டனில் பயணிகள் இரயில் ஒன்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் Purley Oaks மற்றும் Kenley இரயில் நிலையங்களுக்கு மத்தியில் சென்று கொண்டிருந்த போது, திடீரென்று முகத்தில் மாஸ்க் மாட்டிய நிலையில் எழுந்த இளைஞன் நீங்கள் இப்போது என் கஷ்டடியில் இருக்கிறீர்கள், உங்களிடம் இருக்கும் பொருட்களை கொடுங்கள் என அங்கிருந்த இரண்டு பயணிகளை கத்தி முனையில் மிரட்டியுள்ளான்.

இதையடுத்து அவன் நவம்பர் மாதம் 10ஆம் திகதி கைது செய்யப்பட்டு, 21-ஆம் திகதி Croydon Crown நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவனுக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அந்த வீடியோவில் சாதரணமான பயணி போன்று இருக்கும், அவன் திடீரென்று முகத்தில் மாஸ்க்கை மாட்டிக் கொண்டு அங்கிருந்த இரண்டு இளைஞர்களிடம் கத்தியை காட்டி மிரட்டுகிறார்.

இதில் ஒரு இளைஞன் உயிருக்கு பயந்து கையை உயர்த்துவது போன்று பதிவாகியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்