தற்கொலை செய்வதற்கு முன் வாட்ஸ் அப்பில் கணவனுக்கு குறுந்தகவல் அனுப்பிய மனைவி! நெஞ்சை உருக்கும் சம்பவம்

Report Print Santhan in பிரித்தானியா

ஸ்காட்லாந்தில் பெண் ஒருவர், தற்கொலை செய்து கொள்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன் தன்னுடைய குடும்பத்தினருக்கு வாட்ஸ் அப்பில் குறுச்செய்தி அனுப்பியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

Sophie என்ற 29 வயது இளம்பெண்ணின் சடலம் கிறிஸ்துமஸ் தினத்திற்கு மூன்று நாட்களுக்கு முன் Edinburgh-க்கு அருகில் இருக்கும் South Queensferry பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.

தற்கொலை செய்து கொண்ட இவர் உடல் ரீதியாக பிரச்சனை சந்தித்து வந்ததாகவும், அதன் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

ஆனால் அதைப் பற்றி இன்னும் உறுதி செய்யாத நிலையில், Sophie தற்கொலை செய்வதற்கு முன் தன்னுடைய குடும்பத்தினரின் வாட்ஸ் குரூப்பில் குறுச்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் நான் உங்கள் அனைவரையும் விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

அதன் பின் Sophie-வின் கணவனுக்கு அனுப்பப்பட்ட குறுஞ்செய்தியில், நான் என்னை அழித்து கொள்ளவுள்ளேன், தவறுக்கு மன்னித்து கொள்ளுங்கள், என்னை புதைக்க வேண்டாம் என்று உருக்கமுடன் கூறியுள்ளார்.

பிரித்தானியாவில் மட்டும் 35-வயதிற்கு குறைவானவர்கள் தற்கொலை செய்து கொள்வது மிகப் பெரிய நோய் போன்று உள்ளது என ஆய்வுகள் கூறுகின்றன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்