பிரித்தானியாவில் மிகவும் மோசமான தேடப்படும் நபர்கள் இவர்கள் தான்! தேசிய குற்ற நிறுவனம் வெளியிட்ட புகைப்படம்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் தேடப்படும் குற்றவாளிகளின் புகைப்படங்களை தேசிய குற்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பிரித்தானியாவில் கடந்த ஆண்டு எந்தளவிற்கும் இல்லாத அளவிற்கு கத்தி குத்து மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்தன.

இதனால் அந்த சம்பவத்தின் காரணமாக 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாக கூறப்படுகிறது.

இநிலையில் தேசிய குற்ற நிறுவனம் மிகவும் மோசமான நபர்களின் புகைப்படங்களை வெளியிட்டு, இவர்களைப் பற்றிய தகவல் தெரிந்தால், உடனடியாக தங்களுக்கு தெரிவிக்கும் படியும், அடையாளம் தெரிவிக்கும் நபரைப் பற்றி எந்த ஒரு தகவலும் வெளியில் வராது என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் அவர்களிடம் எந்த ஒரு பேச்சு வார்த்தையும் வைக்க வேண்டாம் என்று கூறப்பட்டுள்ள நிலையில் அவர்களின் பெயர்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Daniel Dugic

250 கிலோ போதை பொருள் கடத்திய வழக்கில் தேடப்படுகிறார்.

Christopher Guest More

இவர் கடந்த 2003-ஆம் ஆண்டு Cheshire பகுதியில் நடந்த கொலை சம்பவத்தில் தேடப்பட்டு வருகிறார்.

இதே போன்று Sarah Panitzke(பெண்), David John Walley, David Ungi, Dominic McInally, Kevin 'Hemp' Parle, Mark Quinn, Jonathon Kelly, Shane O'Brien, Shazad Ghafoor, Mehmet Salih, Costas Sampson, Timur Mehmet, Christakis Philippou, Ersin Mustafa, Ozgur Demir, Osman Aydeniz, Mark Liscott, Rezgar Zengana, Michael Paul Moogan, John Barton, Shashi Dhar Sahnan, Fatah Benlaredj, Allan Foster, Derek McGraw Ferguson, Daniel Bowes ஆகியோரும் பல்வேறு குற்றச்சாட்டிற்காக தேடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்