மனிதக்குரங்கை வெறுத்து ஒதுக்கிய தாய்...பிரிந்து சென்றும் அனுபவித்த வேதனைகள்! நெஞ்சை உருக்கும் பின்னணி

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் உள்ள விலங்கியல் பூங்காவில் பிறந்த மனிதக்குரங்கு ஒன்று ஜேர்மனியில் தற்போது இருக்கும் நிலையில் மீண்டும் பிரித்தானியாவுக்கே கொண்டு வரப்படவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Leicestershire-ல் உள்ள Twycross விலங்கியல் பூங்காவில் கடந்த 2008-ல் பிறந்த ஆண் மனிதக்குரங்குக்கு Bili என பெயர் வைக்கப்பட்டது.

Bili-ஐ ஏற்க அதன் தாய் குரங்கு மறுத்ததால், அது கிழக்கு ஜேர்மனிக்கு கொண்டு வரப்பட்டது.

ஆனால் அங்கு Bili உடன் தங்கியிருந்த பெண் குரங்குகள் Bili-ஐ உடன் தங்க வைக்க மறுத்தன. இதன் காரணமாக மூன்றாம் முறையாக Wupperta விலங்கியல் பூங்காவுக்கு Bili கொண்டு வரப்பட்டது.

Wuppertal Zoo

அங்கு Bili உடன் தங்கியிருந்த இரண்டு ஆண் குரங்குகள் அதன் மீது தாக்குதல் நடத்தியதில் Bili-ன் உடலில் பல உடலில் காயம் ஏற்பட்டுள்ளது.

காயத்துடன் Bili இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி நெஞ்சை உருக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

இந்நிலையில் பிறந்ததிலிருந்தே பல்வேறு வேதனைகளை அனுபவித்து வரும் Bili குரங்கை மீண்டும் பிரித்தானியாவுக்கு கொண்டு வர கோரிக்கை வலுத்துள்ளது. இது தொடர்பான கோரிக்கை மனுவில் இதுவரை 50,000 பேர் கையெழுத்து போட்டுள்ளனர்.

Wuppertal Zoo

இதை Petra Bente என்ற விலங்கு நல ஆர்வலர் தான் தொடங்கி வைத்தார்.

அதே நேரத்தில் Bili குரங்கு தற்போது தங்கியுள்ள Wupperta விலங்கியல் பூங்கா நிர்வாகம் கூறுகையில், எங்கள் பூங்காவிலேயே Bili-ஐ பாதுகாப்பாக வைக்க ஏற்பாடுகள் செய்துள்ளோம்.

Bili-க்கு எதிராக நடக்கும் தாக்குதல்களை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wuppertal Zoo

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers