அலறல் சத்தம் கேட்டு அதிர்ந்த அண்டை வீட்டார்: மகள்களுடன் சேர்ந்து சடலமாக கிடந்த தாய்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

இங்கிலாந்தில் மகள்களை கொலை செய்துவிட்டு தாயும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தின் போல்டன் பகுதியை சேர்ந்தவர் டிஃப்பனி ஸ்டீவன்ஸ் (27). இவருக்கு ஒன்று மற்றும் மூன்று வயதில் கேசி, டார்சி என்கிற குழந்தைகள் இருந்தனர்.

நேற்றைக்கு முன்தினம் மலை, வீட்டிற்கு வெளியே டிஃப்பனியின் சகோதரனுக்கும், முன்னாள் காதலனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

சத்தம் கேட்டு பக்கத்து வீட்டை சேர்ந்த நபர்கள் என்ன நடக்கிறது என தெரியாமல் குழம்பியுள்ளனர்.

இந்த நிலையில், டிஃப்பனி தன்னுடைய இரண்டு மகள்களையும் கொன்றுவிட்டு, தற்கொலை செய்துள்ளார். அவருடைய உடலை மீட்ட பொலிஸார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பொலிஸார் கூறுகையில், டிஃப்பனியின் மரணத்தில் எந்த மர்மமும் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்துகொண்டார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers