மகளை மனைவியாக நினைத்து வாழ்க்கை நடத்திய தந்தை: 35 வருடங்கள் போராடி வெற்றி பெற்ற பெண்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவை சேர்ந்த பெண் ஒருவர், தன்னை பாலியல் அடிமையாக வைத்திருந்த தந்தைக்கு தண்டனை கிடைத்திருப்பதை பெருமையாக கொண்டாடி வருகிறார்.

பிரித்தானியாவை சேர்ந்த எலியட் ஆப்பிள்யார்ட் என்கிற 71 வயதாகும் தந்தை, 1980களில் தன்னுடைய மனைவி இறந்த பிறகு மகளை மனைவி போல நடத்த ஆரம்பித்துள்ளார்.

மகளுக்கு நிச்சயதார்த்த மோதிரம் அணிவித்த அவர், உடலில் காதலின் அடையாளமாக அவருடைய பெயரை பச்சை குத்தியுள்ளார்.

வாரத்திற்கு மூன்று முதல் நான்கு முறை துஸ்பிரயோகம் செய்துள்ளார். மூன்று வருடங்களாக நடந்த கொடுமை பற்றி அவருடைய மகள் கரோல் ஹிக்கின்ஸ்(49), 1985ம் ஆண்டு பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

ஆனால் அதனை பொலிஸார் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. கரோல் அப்பொழுது சிறுமியாக இருந்ததால் வாழ்க்கை பாழாகிவிடும் எனக்கூறி மறுத்துள்ளனர்.

அதனைத்தொடர்ந்து 2005, 2012, 2014 மற்றும் 2015ம் ஆண்டுகளிலும் தொடர்ந்து புகார் கொடுத்தார். அதன்பிறகே வழக்கு பற்றிய விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

35 வருடமாக அவர் நடத்திய நீதி கேட்கும் போராட்டத்தில் வெற்றியாக, இன்று குற்றவாளிக்கு இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில், 14 வயது சிறுமியாக இருந்த மகளை எலியட் துஸ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், அவருடைய சிறைத்தண்டனையில் பாதி ஆண்டுகள் கழிந்த பின்னரே ஜாமீன் கேட்பதற்கான தகுதி பெறுவார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

தன்னுடைய வாழ்க்கையில் நடந்த துன்பத்தினை பற்றி 2015ம் ஆண்டு, 'காம்பெரிங் தி இம்பாசிபிள்: மேக்கிங் தி டிரீம் வான் ட்ரூ' என்ற புத்தகத்தினை கரோல் ஹிக்கின்ஸ் வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் தன்னுடைய போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி இன்று வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பு என மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers