இளவரசர் வில்லியத்திற்காக தமது கனவுகளை கைவிட்ட கேட் மிடில்டன்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் கணவர் வில்லியத்திற்காக தமது கனவுகளை துறந்துள்ளார் என சர்வதேச பத்திரிகைகள் தகவல் வெளியிட்டுள்ளன.

பலருக்கும் தங்களின் குடியிருப்பு தொடர்பில் பல கனவுகள் இருக்கும். அமைதியான, இடையூறுகள் இல்லாத குடியிருப்புகளில் வாழ பலரும் ஆசைப்படுவார்கள்.

பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டனுக்கும் தமது குடியிருக்கும் இல்லம் தொடர்பில் பல கனவுகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் கணவர் வில்லியத்திற்காக தனது கனவுகளை அவர் துறந்துள்ளதாக கூறப்படுகிறது.

திருமணத்திற்கு பின்னர் எலிசபெத் ராணியார் பரிசாக அளித்த அந்த இல்லமே கேட் மிடில்டனின் கனவு இல்லம் என அவர் தெரிவித்துள்ளார்.

எலிசபெத் ராணியாரின் ஓய்வு இல்லமான சாண்டிங்ஹாம் எஸ்டேட் அருகே அமைந்துள்ள ஆன்மர் ஹால் எனப்படும் இல்லமே கேட் மிடில்டனின் கனவு இல்லம்.

தமது எஞ்சிய வாழ்க்கையில் தனியாக முடிவெடுக்கும் வாய்ப்பு அமைந்தால் ஆன்மர் ஹால் இல்லத்தில் வாழும் முடிவை எடுப்பேன் என கேட் குறிப்பிட்டுள்ளார்.

இளவரசர் வில்லியத்திற்கு அரச குடும்பத்தில் முக்கியத்துவம் அதிகரித்து வருவதால் தற்போது குடியிருக்கும் இல்லத்தில் இருந்து ஆன்மர் ஹால் இல்லத்திற்கு குடிபெயர முடியாமல் உள்ளது என கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers