ஐரோப்பியாவிலிருந்து பிரித்தானியா வெளியேறினால் 3.5 மில்லியன் மக்களின் கடவுச் சீட்டு நிலை என்ன ஆகும்?

Report Print Santhan in பிரித்தானியா

ஐரோப்பியா கூட்டமைப்பிலிருந்து பிரித்தானியா வெளியேறினால் 3.5 மில்லியன் மக்கள் குறிப்பிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு தங்களுடைய கடவுச்சீட்டை பயன்படுத்தி செல்ல முடியாத நிலை ஏற்படும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து பிரித்தானியா விலகுவது குறித்து பொதுமக்களிடம் கடந்த 2016-ஆம் ஆண்டு எடுத்த வாக்கெடுப்பில் விலக வேண்டும் என்று பெரும்பாலான மக்கள் வாக்களித்தனர்.

பிரித்தானியா வெளியேறினால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று எதிர்கட்சி அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் கூறி வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து ஐரோப்பிய அமைப்பிலிருந்து பிரித்தானியா விலகுவதற்கான ஒப்பந்தத்தை கடந்த நவம்பர் மாதம் ஐரோப்பிய கூட்டமைப்பு அளித்தது.

இதையடுத்து இதற்கான ஒப்புதல் வழங்க பிரித்தானியா நாடாளுமன்றத்தில் சமீபத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் பிரதமர் தெரசா மே மோசமான தோல்வியை சந்தித்தார், அதன் பின் நடத்தப்பட்ட நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார்.

இதனால் ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து பிரித்தானியா விலகுவதில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பலருக்கும் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து பிரித்தானியா வெளியேறினால் பிரித்தானியா கடவுச்சீட்டு வைத்திருக்கும் சுமார் 3.5 மில்லியன் மக்களின் கடவுச் சீட்டு குறிப்பிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு (பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் உட்பட) செல்ல பயன்படாமல் போகலாம் என்று பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ளது.

அதில், தற்போது இருக்கும் பெரும்பாலான பயணிகள் கடவுச் சீட்டு புதுப்பிப்பதற்கு முன்பே வருவதில்லை. அப்படி புதுப்பிப்பதற்கு முன்பே வராததால், ஐரோப்பிய யூனிலிருந்து விலகினால் சுமார் 3.5 மில்லியன் கடவுச் சீட்டு வைத்திருப்பவர்கள் குறிப்பட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு தங்கள் கடவுச் சீட்டை வைத்து செல்ல முடியாமல் போகலாம்.

குறிப்பாக Schengen பகுதி அதாவது 26 யூரோப்பியன் ஸ்டேட்ஸ்களுக்கு ஏதேனும் ஒப்பந்தம் இல்லாமல் இருந்தால் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers