அம்மா உன்னை விட்டு போக போறேன்... 6 வயது மகனிடம் கூறிய இளம்தாய்... மனதை உருக்கும் பின்னணி

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் இளம் தாய் ஒருவர் புற்றுநோய் முற்றியதன் காரணமாக விரைவில் உயிரிழக்க போகும் நிலையில் தனது 6 வயது மகனிடம் நிலைமையை எடுத்து கூறியுள்ளார்.

Derby நகரை சேர்ந்தவர் நியோமி நைடன் (26). இவருக்கு 6 வயதில் ஜவர்ன் என்ற மகன் உள்ளான்.

இந்நிலையில் நியோமி சில ஆண்டுகளுக்கு முன்னர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.

அவரின் நோய் முற்றி கொண்டே வந்த நிலையில் விரைவில் அவர் உயிரிழந்து விடுவார் என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

Image: DerbyshireLive/ WS

இதையடுத்து தனது ஆசை மகனிடம் தனது நிலையை விளக்கும் பரிதாப நிலைக்கு நியோமி தள்ளப்பட்டார்.

அதன்படி வெகுநாட்கள் உன்னுடன் நான் இருக்க மாட்டேன், உன்னை விட்டு பிரிய போகிறேன் என கனத்த மனதோடு கூறியுள்ளார்.

இது குறித்து நியோமியின் சகோதரி கிறிஸ்டி கூறுகையில், பல ஆண்டுகளாக புற்றுநோயுடன் நியோமி போராடிய நிலையில் அது முடிவுக்கு வரவுள்ளது, இந்த விடயத்தை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

நியோமியின் இறுதிச்சடங்குக்காக Gofundme பக்கம் மூலம் நிதி திரட்டி வருகிறோம்.

Image: DerbyshireLive/ WS

தற்போது வரை £1,500 நிதி கிடைத்துள்ளது, £2,500 பணம் கிடைக்க வேண்டும் என்பது எண்ணம்.

நியோமியின் விருப்பப்படி வெள்ளை நிற சவப்பெட்டி தயார் செய்யப்படவுள்ளது.

இதோடு இறுதிச்சடங்குக்கு பின்னர் நியோமி ஆசைப்படி இசை மற்றும் நடன நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யவுள்ளோம் என கூறியுள்ளார்.

Image: DerbyshireLive/ WS

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers