இளவரசியாக இருந்தாலும் நானும் ஒரு சராசரி அம்மாதான்: மகிழ்ச்சியை வெளிப்படுத்த மேகன் செய்த செயல்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

தாய்மை அடைவது என்பது எல்லா பெண்களுக்குமே ஒரு மகிழ்ச்சியான விடயம்தான், அது ஒரு சாதாரண பெண்ணாக இருந்தால் என்ன, பிரித்தானியா இளவரசியாக இருந்தால் என்ன, எல்லோரும் இந்த இந்த விடயத்தில் சமம்தான் என்பதை நிரூபித்திருக்கிறார் இளவரசி மேகன்.

எல்லா நாடுகளிலுமே தாய்மை என்பது போற்றப்படும், விரும்பப்படும் விடயம் என்றாலும், பல ஆசிய நாடுகளில் பெரும்பாலும் குழந்தை பிறக்கும் வரை புகைப்படமே எடுக்க மாட்டார்கள்.

ஆனால், மேற்கத்திய நாடுகளைப் பொறுத்தவரையில், கர்ப்பமாக இருக்கும் தனது வயிற்றை காட்டுவதில் அந்த பெண்களுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி.

மேடிட்ட தனது வயிற்றை புகைப்படம் எடுத்து வெளியிடாத திரைத்துறை பிரபலங்களே இல்லை எனலாம்.

சில மொடல்கள் நிறை மாத கர்ப்பமாக இருக்கும்போது கூட, மார்பகங்களை கையால் மறைத்துக் கொண்டு நிர்வாண போட்டோ ஷூட்களில் பங்கெடுப்பது, அங்கெல்லாம் சர்வ சாதாரணம்.

அமெரிக்க பின்னணி கொண்ட இளவரசி மேகனும் தனது மேடிட்ட வயிற்றை வெளிக்காட்டுவதில் ஆர்வம் காட்டுவதை சமீபத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் வீடியோக்களில் காணலாம்.

ஒரு பிரித்தானிய இளவரசி என்ற முறையில், அவரால் தனது மேடிட்ட வயிற்றை புகைப்படம் எல்லாம் எடுத்து வெளியிட முடியாது என்றாலும், அவ்வப்போது தனது கோட்டை கையால் விலக்கி, நானும் தாயாகப் போகிறேன் என்னும் மகிழ்ச்சியை அவர் வெளிப்படுத்துவதை சில வீடியோக்களில் காண முடிகிறது.

அது மட்டுமின்றி, சமீபத்தில் மரபுகளை மறந்து, தனது பிரசவம் ஏப்ரல் அல்லது மேயில் இருக்கும் என்பதை வெளிப்படையாக அவர் தெரிவிக்கும் வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers