மனைவியை 10 ஆண்டுகளாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கணவன்: அடுத்தடுத்து வெளியாகும் தகவல்

Report Print Raju Raju in பிரித்தானியா

அயர்லாந்தில் மனைவியை 10 ஆண்டுகள் வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சீனாவை பூர்வீகமாக கொண்ட 55 வயதான நபர் தனது மனைவியை கடந்த 2003லிருந்து 2013ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தினார்.

மனைவி எவ்வளவு மறுத்தும் அடித்து துன்புறுத்தியுள்ளார் கணவர்.

இதன்பின்னர் கணவரிடம் இருந்து மனைவி தப்பிய நிலையில் கணவர் பொலிசுக்கு பயந்து தலைமறைவானார்.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை பொலிசார் பிரித்தானியாவின் Heathrow விமான நிலையத்தில் வைத்து அந்த நபரை கைது செய்தனர்.

அவர் மீது மனித கடத்தலில் ஈடுபட்டது, தனது சுயநலத்துக்காக வலுக்கட்டாயமாக மனைவியை பாலியல் தொழிலில் தள்ளியது போன்ற பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவரிடம் பிப்ரவரி 21ஆம் திகதி அடுத்தக்கட்ட விசாரணை நடத்தப்படும் என நீதிமன்றம் கூறியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers