3 வயது மகனின் முகத்தில் ஆசிட் வீசிய கொடூர தந்தை; அதிர்ச்சி காரணம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் பிரிந்து சென்ற மனைவியை பழி வாங்க தனது 3 வயது மகனின் முகத்தில் தந்தை ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த தந்தை தமது மகனின் முகத்தில் ஆசிட் வீச மேலும் 6 நபர்களை ஏற்பாடு செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தமது மகனுக்கு உகந்த தாயார் அவர் இல்லை என்பதை நிரூபிக்கவே இந்த கொடுஞ்செயலுக்கு அவர் திட்டமிட்டதாக தெரியவந்துள்ளது.

இந்த அதிர்ச்சி சம்பவத்தில் குறித்த 3 வயது சிறுவன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், முகம் வெந்த நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் திகதி நடந்தேறிய இக்கொடூர சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட அந்த 40 வயது நபர் மீதும் எஞ்சிய 6 பேர் மீதும் பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

தற்போது மருத்துவர்களின் தொடர் கவனிப்பால் குறித்த சிறுவன் குணமடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது முதன்முறையல்ல குறித்த சிறுவன் மீது அந்த கொடூர தந்தை ஆசிட் தாக்குதலை முன்னெடுப்பது.

கடந்த ஆண்டு ஜூலை 13-ஆம் திகதியும் தாக்குதலுக்கு உள்ளானியுள்ளான். அதற்கும் குறித்த தந்தையே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் குறித்த நபரின் மனைவி தமது 3 பிள்ளைகளுடன் தனியாக பிரிந்து சென்றுள்ளார்.

தொடர்ந்து விவாகரத்துக்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார். இதனாலையே அந்த நபர் ஆத்திரத்தில் அந்த தாயாருக்கு மிகவும் நெருக்கமான 3 வயது மகன் மீது சொந்த தந்தையே ஆசிட் வீசியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers