மீண்டும் சர்ச்சையில் சிக்கிய மேகன்: சிக்க வைத்த விருந்து

Report Print Balamanuvelan in பிரித்தானியா

சிறிது காலம் சர்ச்சை எதிலும் சிக்காமல் தப்பி வந்த பிரித்தானிய இளவரசி மேகனை, அவர் நண்பர் ஒருவருக்கு கொடுத்த விருந்து மீண்டும் சர்ச்சையில் சிக்க வைத்திருக்கிறது.

பிரபலங்களின் மேக் அப் கலைஞரும் தனது அமெரிக்க நண்பருமான Daniel Martin என்பவருக்கு கென்சிங்டன் மாளிகையில் சிறு விருந்தொன்று அளித்தார் மேகன்.

அதில் டீயுடன் வெள்ளித்தட்டுகளில் மேகனுக்கு பிடித்த அவக்கேடோ டோஸ்டும் பரிமாறப்பட்டது.

மேகன் ஒரு நடிகையாக இருந்த காலத்திலிருந்து நண்பராக இருந்தவரான Martin, சாப்பிடுவதற்குமுன் தனக்கு வழங்கப்பட்ட உணவை புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவிட்டார்.

அவ்வளவுதான் மேகன் மீது கடுமையான விமர்சனங்கள் வந்து குவியத் தொடங்கிவிட்டன.

அப்படி என்ன தவறு செய்து விட்டார் மேகன், நீண்ட நாள் நண்பர் ஒருவருக்கு விருந்தளிப்பது ஒரு தவறா? உண்மையில் விருந்தளித்ததில் எந்த தவறும் இல்லை, விருந்தில் வழங்கப்பட்ட ஒரு பொருள்தான் உலகமகா சர்ச்சையை ஏற்படுத்திவிட்டது.

அது என்ன பொருள்? அது அந்த அவக்கேடோ டோஸ்ட்தான்.

அவக்கேடோ பல நற்குணங்களும் சுவையும் கொண்ட பழமானாலும், அதன் பின்னணியில் ஒரு பெரிய வெடிகுண்டு அளவுக்கு பெரிய பிரச்சினை இருக்கிறது.

பெரும்பாலான அவக்கேடோ பழங்கள் விளைவிக்கப்படுவது மெக்ஸிகோவில். மெக்ஸிகோவில் அவக்கேடோ பச்சைத் தங்கம் என்று அழைக்கப்படுகிறது.

ஏனென்றால் அவக்கேடோ விவசாயத்தின் பின்னணியில் ஒரு பெரிய சட்ட விரோத செயல் இருக்கிறது.

மெக்ஸிகோ விவசாயிகளுக்கு அவக்கேடோ பழங்களை விளைவிப்பதால் ஆண்டொன்றிற்கு 115,000 பவுண்டுகள் வரை கிடைக்கிறது. இது மிகப்பெரிய தொகை.

எனவே இவ்வளவு சம்பாதிக்கும் விவசாயிகள், மெக்ஸிகோவின் பிரபல சட்ட விரோத குற்றவியல் கும்பல் ஒன்றிற்கு பயந்து வாழ்கிறார்கள்.

இந்த கும்பல் அவக்கேடோ விளைவிக்கும் விவசாயிகளை மிரட்டி பணம் பறிக்கிறது. ஒரு பெட்டி பழங்களுக்கு இவ்வளவு பணம் என்கிற அளவுக்கு கொள்ளையடிக்கப்படுகிறது. பணம் கொடுக்க மறுப்பவர்கள் கடத்திச் செல்லப்படுகிறார்கள், பணம் கேட்டு மிரட்டப்படுகிறார்கள்.

சில நேரங்களின் பிணையத்தொகை கொடுத்த பின்னரும் சிலர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இப்படி மிரட்டியே ஆண்டொன்றிற்கு 115 மில்லியன் பவுண்டுகள் வரை கொள்ளையடிக்கிறது அந்த கொள்ளைக் கும்பல்.

2014ஆம் ஆண்டு இந்த கும்பல் Tancitaro என்ற நகரில் பணம் கொடுக்க மறுத்த விவசாயி ஒருவரின் மகளை கடத்தி, வன்புணர்வுக்குள்ளாக்கி கொலை செய்ய, ஊர் மக்கள் பயங்கர வெட்டு குத்து சண்டைக்குப்பின் அவர்களை ஊரை விட்டு துரத்தினர். ஆனாலும் அந்த கும்பலின் அட்டூழியம் குறைந்தபாடில்லை.

இது இப்படியிருக்க, இன்னொரு பக்கம் நல்ல வருமானம் கிடைப்பதால் அவக்கேடோவை விளைவிப்பதற்காக, விவசாயிகள் காடுகளை அழித்து விவசாய நிலங்களாக மாற்றி வருகிறார்கள். இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.

சரி, மேகன் சாப்பிடும் அவக்கேடோ பழங்கள் மெக்ஸிகோவிலிருந்த வரவில்லைஎன்றுகூட வைத்துக் கொள்லலாம்.

அவை சிலி, டொமினிக்கன் குடியரசு அல்லது பெருலிருந்து கூட வரலாம். அப்படிப் பார்த்தாலும், அவ்வளவு தொலைவிலிருந்து எளிதில் அழுகி விடக்கூடிய அவக்கேடோ பழங்களை, உறையச் செய்து குளிர் சாதனப்பெட்டியில்தான் கொண்டு வர வேண்டும், இதனால் அவற்றிலிருந்து வெளியாகும் பசுமை இல்ல வாயுக்களாலும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுகிறது.

இன்னொரு பக்கம், அவக்கேடோ பழங்களை விளைவிக்க எக்கச்சக்கமான தண்ணீர் தேவை. ஒரு கிலோ அவக்கேடோ பழங்களை விளைவிப்பதற்கே 100 லிற்றர் தண்ணீர் வேண்டும். சிலியைப் பொருத்தவரை பெரும் தண்ணீர் தட்டுப்பாடு.

இப்படி ஒரு நிலைமையில் அவக்கேடோ பழங்கள் விளைவதால், பேசாமல் மேகன் தன் நண்பருக்கு அவக்கேடோ டோஸ்டுக்கு பதிலாக கேக் கொடுத்திருக்கலாம் என்று வேடிக்கையாக கூறுகிறார்கள் விமர்சகர்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers