ஆபாச பேச்சால் 14 வயது சிறுமியை மயக்கிய நபர்: சதித்திட்டத்தை முறியடித்த அதிகாரிகள்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

இங்கிலாந்தில் 14 வயது சிறுமியை சந்திக்க 400 மைல் தூரம் பயணித்த நபரை தடுத்து நிறுத்தி பொலிஸார் சிறையில் அடைத்துள்ளனர்.

இங்கிலாந்தின் மெய்ட்ஸ்டோன் பகுதியை சேர்ந்த ரிச்சர்ட் க்ராட்டிகே என்கிற 48 வயதான நபர், பெண்ணாக மாறுவதற்கான மாத்திரைகளை எடுத்துக்கொண்டிருந்தார்.

இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், தன்னுடைய இருப்பிடத்திலிருந்து 400 மைல்களுக்கு அதிகமான தொலைவில் உள்ள கிளாஸ்கோ பகுதிக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தார்.

அவரை புக்காநன் தெரு பகுதியில் வைத்து மறித்த அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ரிச்சர்ட் ஆன்லைனில் பெண்களை தேடும்போது, டெய்லர் என்கிற 14 வயது சிறுமியை சந்தித்துள்ளார். அந்த சிறுமி தன்னுடைய வயது 18 என பொய்யான தகவலை வெளியிட்டு அதில் சேர்ந்திருக்கிறார்.

ஆன்லைனில் பேச ஆரம்பித்த இருவரும், நாளடைவில் வாட்ஸ் ஆப்பில் ஆபாசமாக பேச ஆரம்பித்தனர். அந்த சிறுமி தான் தாயாக ஆசைப்படுவதாக அந்த நபரிடம் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வந்த அதிகாரிகள், விபரீத சம்பவம் நடைபெறுவதற்கு முன்பாக அவரை கைது செய்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இன்று வழக்கினை விசாரித்த நீதிபதி, தண்டனை விவரத்தை தள்ளிவைத்து குற்றவாளியை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers