பிரித்தானியா மகாராணி எலிசபத்தை விட இவர் தான் பணக்காரரா? வெளியான உண்மை தகவல்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபத்தை விட சோனியா காந்தி பணக்காரர் என ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் அஸ்வினி உபத்யாயா பிரபலமான நாளிதழ் ஒன்று வெளியிட்டிருந்த கட்டுரையை பகிர்ந்திருந்த தகவல் குறித்து உண்மை என்ன என்பது வெளியாகியுள்ளது.

காங்கிரஸின் எலிசபத், பிரித்தானியா மகாராணியை விட பணக்காரர்

காங்கிரஸின் சுல்தான் (இளவரசர்), ஓமன் சுல்தானைவிட வளமானவர்.

அவர்களின் நூறு சதவிகித முறைகேடான சொத்துகளை பறிமுதல் செய்ய இந்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று டுவிட் செய்திருந்தார்.

இதை அவர் பிரதமர் மோடி அலுவலக டுவிட்டர் கணக்கிற்கு டேக் செய்திருந்தார்.

அதன் பின், டெல்லி பா.ஜ.க சமூக ஊடக தலைவர் புனித் அகர்வாலாவும், இந்த டுவிட்டை ரீ டுவிட் செய்திருந்தார்.

அதில், புனித், எத்தனை சேனல்கள் இந்த விஷயத்தில் விவாதம் நடத்தும், முறைகேட்டை தவிர காங்கிரஸுக்கு வேறு எப்படி வருவாய் வந்திருக்க போகிறது? என்று குறிப்பிட்டு இருந்தார்.

பல வலதுசாரி டுவிட்டர் கணக்குகள் இதனை ரீ-ட்வீட் செய்திருந்தன.

இந்நிலையில் இந்த கட்டுரையை வெளியிட்டது பிரபல நாளிதழான டைம்ஸ் ஆப் இந்தியா தான், அந்த நாளிதழில் ஹபிங்டன் போஸ்ட் வெளியிட்ட ஒரு செய்தியை மேற்கோள் காட்டி டைம்ஸ் ஆப் இந்தியா அந்த கட்டுரையை வெளியிட்டிருந்தது.

இது கடந்த 2013-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2-ஆம் திகதி வெளியாகியிருந்தது.

பணக்கார அரசியல் தலைவர்கள் வரிசையில் சோனியா காந்தி 12-ஆவது இடத்தில் இருக்கிறார். சோனியா காந்திக்கு 200 கோடி டொலர்கள் அளவுக்கு சொத்து இருக்கிறது.

இரண்டாம் எலிசபெத் ராணி, ஓமன் இளவரசர், சிரியா அதிபரைவிட பணக்காரர்.

2015-ஆம் ஆண்டு உபத்யாயா இதே கட்டுரையை பகிர்ந்திருந்தார்.

ஹபிங்டன் போஸ்டை மேற்கோள் காட்டி அந்த சமயத்தில் டைம்ஸ் ஆப் இந்தியா மட்டுமின்றி, பல ஊடக குழுமங்களும் இந்த கட்டுரையை அப்போது வெளியிட்டிருந்தன.

2014 நாடாளுமன்ற தேர்தலை குறி வைத்து காங்கிரஸை சிறுமைப்படுத்தும் நோக்கத்துடன் இந்த கட்டுரை அப்போது அதிகளவில் பகிரப்பட்டது.

ஆனால் அதன் உண்மை என்ன என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ஹபிங்டன் போஸ்ட் இந்த செய்தியை 2013 நவம்பர் 29-ஆம் திகதி வெளியிட்டிருந்தது தெரியவந்துள்ளது.

ஆனால், அதன் பின் அந்த கட்டுரையை புதுபித்து வெளியிட்டிருந்தது.

புதுபித்து வெளியிடும் போது ஒரு குறிப்பையும் அதனுடன் சேர்த்திருந்தது.

அதில், சோனியா காந்தி மற்றும் கத்தார் முன்னாள் அமிர், ஹமீத் பின் கலிபா அல்- தானி பெயரை அந்த பட்டியலிலிருந்து நீக்குகிறோம்.

சோனியாவின் பெயர் மூன்றாம் தரப்பு இணையத்தின் தகவல்களை அடிப்படையாக கொண்டு அந்த பட்டியலில் இணைக்கப்பட்டது.

பின் அந்த தகவல்கள் கேள்விகுள்ளாக்கப்பட்டன. எங்கள் ஆசிரியர்களால் தொகையை உறுதிப்படுத்த முடியாமல் போனதை அடுத்து அந்த இணைப்பை நீக்குகிறோம் மற்றும் இந்த குழப்பங்களுக்கு வருந்துகிறோம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் டைம்ஸ் ஆப் இந்தியா அந்த கட்டுரையை நீக்கவோ அல்லது திருத்தம் செய்யவோ இல்லை. காங்கிரஸ் கட்சி இந்த விவகாரத்தில் எந்த கருத்தும் கூறவில்லை.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers